38வது தேசிய கூட்டாலோசனைக் கூட்டம்
38வது தேசிய கூட்டாலோசனைக் கூட்டம் திருமதி சுஜாதாரே,Director(HR) அவர்கள் தலைமையில் இன்று (29/04/2019) நடைபெற்றது.
கூட்டம் துவங்குவதற்கும் முன்பாக திருமதி சுஜாதாரே,Director(HR) அவர்கள் 30.04.2019 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரை ஊழியர் தரப்பு சால்வை, பூங்கொத்து மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தது.
தோழர் சந்தேஸ்வர் சிங் 3வது ஊதிய மாற்றம் , 01.10.2000க்கு பின் பணியமர்த்தப்பட்ட TSM ஊழியர்களுக்கு ஜனாதிபத்தி உத்தரவு வழங்குதல் , 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கேசுவல் ஊழியர்களின் ஊதிய மாற்றம் , கருணைப்பணி மீதான தடை நீக்கம் , JE & TT கேடர்களுக்கான போட்டித்தேர்வு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் இரு ஊழியர்கள் மீது சட்டவீரோதமாக வழங்கப்பட்ட கட்டாய பணி ஓய்வு உத்தரவை திரும்ப பெறுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்.
தோழர் அபிமன்யு தனது உரையில் ஊதிய மாற்ற நடவடிக்கைகளை மீண்டும் விரைந்து துவக்குவது , 8வது ஊழியர் சரிபார்ப்புத்தேர்தலை விரைந்து நடத்துவது , தங்களது கோரிக்கையின் படி சங்க அங்கீகாரத் தேர்தல் விதிகளின் படி 51% ஓட்டுகளை பெற்றால் ஒரு சங்கத்திற்கு மட்டும் அதிகாரம் அளிக்கும் சரத்தை நீக்குவது , BSNL நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் திரட்டப்படும் நிதியை VRS திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது மற்றும் தேர்வு விதிகளை திருத்தி JAO பதவிக்கான போட்டித் தேர்வை விரைவில் நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
3வது ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்கிடுவதற்கான வழிகாட்டுதலைப் பெற DOT இலாகாவினை BSNL நிர்வாகம் அனுகிடும் என நிர்வாகம் தெரிவித்தது.
JAO பதவிக்கான திருத்தப்பட்ட தேர்வு விதிகளுக்கு BSNL BOARD ஒப்புதல் தரவேண்டியுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முந்தைய தேர்வில் தகுதியடைந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மற்றும் மேல்நிலைக் கல்வி முடிக்காமல் மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் மூலம் நேரடியாக M.Com , MA பட்டம் பெற்ற ஊழியர்களை JAO போட்டித்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை.
DOT இலாகாவின் வழிகாட்டுதல் படி 20.01.2019 அன்று நடைபெற்ற Asst.Manager பதவிக்கான போட்டித் தேர்வு முடிவுகளின் மீது SC / ST ஊழியர்களின் மதிப்பெண்கள் மறுமதிப்பீடு செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.
BSNL நிதிநிலையை மேம்படுத்துவது குறித்து ஊழியர் சங்கங்கள் அளித்த கோப்புகளின் அடிப்படையில் BSNL நிர்வாகம் DOT இலாகாவிடம் விவாதிக்கும். மேலும் BSNL நிர்வாகம் அதன் பங்குதாரர்கள் அனைவரிடமும் நிதி நிலையை மேம்படுத்துவது குறித்து ஆழ்ந்து விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்கம் என்பது பதவி அடுக்குகள் மற்றும் ஊதிய மாற்றத்துடன் இணைந்து விவாதிக்க வேண்டிய தேவையுள்ளதால் தற்போதை சூழ்நிலையில் இது குறித்து விவாதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்தது.
கிராமப்புற பகுதிகளுக்கு மாறுதல் அளிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது டெனூர் காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் திருப்பி அழைக்கப்படுவார்கள் எனவும். இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் உள்ள குழப்பங்கள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்தது.
10ம் வகுப்பு முடித்தவர்களையும் போட்டித் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் விதிகளை தளர்த்திட வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை .