27 April 2019

SSA க்கள் இணைப்பு

Deloittee குழு அறிக்கையின் அடிப்படையில் SSA க்களை இணைத்து Business Area எனும் அடிப்படையில் நிர்வாக அலகுகளை புதிதாக அமைக்க BSNL நிர்வாகம் முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் அவ்வறிப்புகள் செயல்படுத்தப்படாமலேயே இருந்து வந்தன. 

இந்நிலையில் SSA க்கள் இணைப்பு 01.06.2019 முதல் அமுலுக்கு வருவதாக BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது. ERP Systemலும் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில்..

நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு  PGM தலைமையிலும்

காரைக்குடி மாவட்டம் மதுரை மாவட்டத்துடனும்..
திருநெல்வேலி மாவட்டம் நாகர்கோவில் மாவட்டத்துடனும்..
தர்மபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்துடனும்..
கும்பகோணம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டத்துடனும்..
விருதுநகர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்துடனும்.. இணைக்கப்பட்டு GM தலைமையில் செயல்படும்

கடலூர் , ஈரோடு , திருச்சி , வேலூர் ,  பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்கள் பழைய முறையிலேயே தனி மாவட்டங்களாக GM தலைமையில் செயல்படும்

இணைப்புகள் வருவாயை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. பூகோள அடிப்படையில் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஊழியர்களுக்கு பயன்தரமிக்கதாக இருந்திருக்கும்.