அம்பேத்கருக்குத் தன் வாழ்க்கையே ஒரு வரலாறாக ஆகப்போகிறது என்றோ, வருங்கால இந்தியர்களால் தான் ஒரு நாயகனாக மகுடம் சூட்டப்படுவோம் என்றோ கனவி லும் யோசித்திருக்க வாய்ப்பு இல்லை. அன்று அவரிடம்இருந்ததெல்லாம் அறிவின் எல்லையைக் காணும் வெறி! அதனால்தான், பாதியில் விட்ட படிப்பைத் தொடர இரண்டா வது முறையாக லண்டன் வந்த அம்பேத்கர், தடதடவென அதிவேக ரயிலைப் போல மூன்றே வருடங்களில் மூன்று பட்டங்களைத் தன் அறிவின் அடையாளங்களாக மாற்றிக் கொண்டார். 1921ல் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டத்தையும், அடுத்தடுத்த வருடங்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்ஸி., மற்றும் டி.எஸ்ஸி., போன்ற ஆய்வுப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டபோது, லண்டன் கிரேஸ் இன் பேராசிரியர்களே ஆச்சர்யத்தில் மூழ்கினர்.அதற்காக அம்பேத்கர் மேற்கொண்ட கடின உழைப்பும், தியாகங்களும், அடைந்த அவமானங்களும் வார்த்தைகளைக் கடந்த வலி நிரம்பியவை...
நீ அறிவைத் தேடி ஓடினால், வரலாறு உன் நிழலைத் தேடி ஓடி வரும். இதுதான் உலக நியதி!
இந்த நியதியின் மிகச் சிறந்த இலக்கணம் அம்பேத்கர்.
அன்று அவருக்குத் தன் வாழ்க்கையே ஒரு வரலாறாக ஆகப்போகிறது என்றோ, வருங்கால இந்தியர்களால் தான் ஒரு நாயகனாக மகுடம் சூட்டப்படுவோம் என்றோ கனவி லும் யோசித்திருக்க வாய்ப்பு இல்லை. அன்று அவரிடம்இருந்ததெல்லாம் அறிவின் எல்லையைக் காணும் வெறி! அதனால்தான், பாதியில் விட்ட படிப்பைத் தொடர இரண்டா வது முறையாக லண்டன் வந்த அம்பேத்கர், தடதடவென அதிவேக ரயிலைப் போல மூன்றே வருடங்களில் மூன்று பட்டங்களைத் தன் அறிவின் அடையாளங்களாக மாற்றிக் கொண்டார். 1921ல் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டத்தையும், அடுத்தடுத்த வருடங்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்ஸி., மற்றும் டி.எஸ்ஸி., போன்ற ஆய்வுப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டபோது, லண்டன் கிரேஸ் இன் பேராசிரியர்களே ஆச்சர்யத்தில் மூழ்கினர்.அதற்காக அம்பேத்கர் மேற்கொண்ட கடின உழைப்பும், தியாகங்களும், அடைந்த அவமானங்களும் வார்த்தைகளைக் கடந்த வலி நிரம்பியவை.
லண்டன் மியூஸிய நூலகம். கார்ல் மார்க்ஸ், மாஜினி, லெனின் என உலகின் தலை சிறந்தமனிதர் களையும், தலைவர்களையும் உருவாக்கியிருக்கும் பெருமை மிக்க அந்த நூலகம்தான் அம்பேத்கருக் கும் அந்த மூன்று ஆண்டுகளில் தாயின் மடியாகவும், தந்தையின் தோளாகவும் விளங்கியது. ஒவ் வொரு நாளும் காலையில் நூல கம் திறக்கப்படுவதற்கு முன்பே, கடும் குளிரையும் பொருட் படுத்தாது நடுங்கிக்கொண்டே வாசலில் வந்து நிற்கும் அம்பேத் கர், மாலையில் கடைசி ஆளாகத் தான் வெளியேறுவார். இல்லை இல்லை… வெளியேற்றப்படுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மறைவிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து, புத்தகங்களுடன் அங்கே பதுங்கிவிடுவார் அம்பேத்கர். இடையில் சாப்பிட்டோமா இல் லையா என்பதுகூட அவருக்கு நினைவிருக்காது. மாலை நான்கு மணி ஆனதும், நூலகக் காவலர் புலம்பிக்கொண்டே அம்பேத்கரை ஒவ்வொரு அறையாகத் தேடிக் கண்டுபிடித்து வெளியேற்றுவது தனிக் கதை. என்றாலும், காவலர் அம்பேத்கரை ஒருநாளும் கடிந்து கொண்டது இல்லை. ஏனென் றால், அவருக்கு ஒரு பழைய கதை தெரியும். இதே நூலகத்தில் இது போலவே பல வருடங் களுக்கு முன், அப்போது இருந்த காவலருக்கு ஒருவர் டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தார். அவர்தான் பின்னாளில் கார்ல் மார்க்ஸ் எனும் மகத்தான மேதையாக அறியப்பட்டார். இது போல அந்த நூலகம் உருவாக்கி இருக்கும் பல மேதைகளின் கதை அந்தக் காவலருக்குத் தெரியுமாத லால், தனக்குச் சிரமம் வைக்கா மல் கண்டுபிடிப்பதற்குச் சுலப மான இடத்தில் அமர்ந்து படிக் கும்படி கோரிக்கை வைப்பதோடு நின்றுவிடுவார்.
கார்ல் மார்க்ஸைப் போலவே அம்பேத்கரும் பான் பல்கலைக் கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர் மனிக்குச் சென்றார். அங்கு படித்துக்கொண்டு இருந்தபோது, மீண்டும் லண்டன் திரும்பச் சொல்லி ‘கிரேஸ் இன்’ கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. பொருளாதாரத்தில் அம்பேத்கருக்கு டாக்டர் பட்டம் தேடித் தந்த ஆய்வுக் கட்டுரையில் சில சொற்கள் பிரிட்டிஷ் மக்களைப் புண்படுத்துவதாகஅமைந் திருப்பதாகவும், அவற்றை மட்டும் சற்று மாற்றி எழுதித் தருமாறும் பேராசிரியர்கள் கேட்டுக்கொண் டனர். இதற்காக, அம்பேத்கர் பான் பல்கலைக் கழகக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லண்டன் திரும்ப வேண்டியதாயிற்று.
அப்போதுதான், லண்டன் நாளிதழ்களில் இந்தியாவைப் பற்றி வரும் செய்திகளில் சமீப காலமாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அடிக்கடி இடம்பெறுவதை அம்பேத்கர் கவனித்தார். ‘யார் இந்த காந்தி? தீண்டாமை குறித்து ஆவேசமாகப் பேசும் இவரால், தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் உண்மை யிலேயே வெளிச்சத்தைக் கொண்டு வர முடியுமா?’ என்ற கேள்விகள் அம்பேத்கரின் மன தில் வட்டமிட்டன.
1923 ஏப்ரலில் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, காந்தியைப்பற்றியும், இந்திய தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகளையும் மேலும் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார் அம்பேத்கர்.
அன்றைய நிலையில் தாழ்த்தப் பட்டவர்கள் யாரும் கற்பனையில் கூடக் கண்டிராத மிக உயர்ந்த பட்டங்களைச் சுமந்தபடி அம் பேத்கர் நாடு திரும்பிய சம்பவம் அனைவரின் புருவங்களையும் பிரமிப்பில் உயரச் செய்தது. முதல்வராகவும், பேராசிரியரா கவும் பதவி ஏற்கும்படி பலகல்லூ ரிகள் அவருக்குத் தூண்டில்போட் டன. இனி, தன் வாழ்வு முழுமை யும் தன் மக்களுக்கானது என்ப தில் உறுதிமிக்கவராக இருந்தஅம் பேத்கர், அந்த அழைப்புகள் அனைத்தையும் நிராகரித்தார். தன் எண்ணத்துக்குத் துணையாக இருக்கும் வழக்கறிஞர் தொழி லைத் தேர்ந்தெடுத்து, அதனுள் பிரவேசித்தார். தானே தேடிச் சென்று, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவிக்கரம் நீட்டினார். அதோடு நில்லாமல், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என தனி பள்ளி, தங்கும் விடுதி போன்றவற் றைக் கட்டித்தர, புதிய இயக்கம் ஒன்றை 1924 ஜூலையில் துவக் கினார். ‘பகிஷ்கரித் ஹித்தஹாரிணி சபா’ என்பதுதான் அந்த அமைப் பின் பெயர்.
ஆனால், இந்த அமைப்பு ஏற் பாடு செய்த முதல் கூட்டம் ஆளில்லாமல் ஈ ஆடியது. தாழ்த் தப்பட்ட மக்கள் அனைவரும்தத் தமது வீட்டு வாசல்களில் அமர்ந்து, இவர்கள் அப்படி என்னதான் சாதித்துவிடப் போகி றார்கள் என்பது போல அவநம் பிக்கையோடு வேடிக்கை பார்த் துக் கேலி பேசிக்கொண்டு இருந் தார்களே தவிர, யாரும் கூட்டத் தில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அமைப்பின் இதர தோழர்கள் உற்சாகம் இழந்தனர். அப்போது அம்பேத்கர் அவர் களிடம் கூறியவை வைர வரிகள். ”அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத் தைக் காட்டி, சரியான பாதையில் வழி நடத்திக் கூட்டிப் போக வேண்டும்!”
சோர்ந்திருந்த தோழர்கள்இந்த வரிகளால் புத்துணர்வு பெற்றனர். உற்சாகம் அடைந்தனர். அதன் பலனாக, மூன்றே வருடங்களில் அந்த அமைப்பு பம்பாயிலும், சுற்றியுள்ள பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்பு உணர்வை உருவாக்கியது.பொதுக்கூட்டங்களில்
அம்பேத்கரின் பேச்சினால் தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய எழுச்சி உண்டானது. அம்பேத்கரின் வீர உரைகளே அனைவரையும் அதிகம் உசுப்பியது காரணம், தாழ்த்தப்பட்டவனின் வலியைப் பற்றி இதர சாதியினரால் அறிவுரீதியாக மட்டுமே பேச முடியும். ஆனால், அந்த வலியை ரத்தமும் சதையுமாக அனுபவித்த இன்னொரு தாழ்த்தப்பட்டவனால் மட்டுமே உண்மையாக, உணர்வுபூர்வமாக அவர்களுக்காகப் போராட முடி யும். பிறந்தது முதலே சமூகத்தால் தீண்டப்படாதவனாகவே ஒதுக்கப் பட்டு, அதன் அத்தனை கொடுமை களையும் நேரடியாக அனுபவித்த காரணத்தால், அம்பேத்கரின் விடுதலைப் பேச்சுக்கள் ஒவ்வொன் றும் சாட்டையடிகளாக விழுந்து அம்மக்களைத் துடித்தெழச்செய் தன.
”பன்னெடுங்காலமாக நீங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக் கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல் லாம் என் இதயம் வெடித்துச் சிதறுகிறது. வளர்ந்த பின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப் பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா!” எனக் கூட்டங்களில் ஆவேசமாக முழங் கினார் அம்பேத்கர். மக்கள் அலை கடலென ஆர்ப்பரித்தனர்.
விளைவு… 1927 மார்ச்சில் வெடித்தது மகத்தான ‘மஹத் குள’ப் போராட்டம்.
அம்பேத்கர் எனும் மனிதரை மகத்தான தலைவராகவும், வர லாற்று நாயகராகவும் மாற்றிய அந்த முதல் நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் ‘பெரியார்’.