13 April 2019

VRS திட்டம் - ஊழியர் தரப்பு - நிர்வாகத் தரப்பு சந்திப்பு


BSNL நிர்வாகம் தங்கள் மீது திணிக்க முற்படும் VRS திட்டத்திற்கு எதிராக தங்களது கடும் எதிர்ப்பை நாடு முழுவதும் உள்ள BSNL ஊழியர்கள் முதற்கட்டமாக இன்று 12.04.2019 ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.. 

இந்நிலையில் BSNL நிர்வாகம் நேற்று 11.04.2019 அன்று தொழிற்சங்கத்தலைவர்களை அழைத்து VRS திட்டம் குறித்து விளக்கியுள்ளது. VRS திட்டம் குஜராத் மாடலில் இருக்கும் எனவும் , VRS திட்டத்திற்கான தேவையையும் , முக்கியத்துவத்தையும் நிர்வாகம் நேற்றைய கூட்டத்தில் விளக்கியுள்ளது.

தொழிற்சங்க தரப்பு சார்பாக VRS திட்டத்தை அமுல்படுத்துவதினால்  BSNL நிறுவனத்திற்கு பலன் ஏதும் கிட்டப்போவதில்லை எனவும் அதற்கு சிறந்த உதாரணமாக MTNL நிறுவனத்தில் அமுல்படுத்தப்பட்ட VRS நடைமுறைகள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டிக் காட்டப்பட்டது. 

மேலும் BSNL நிறுவனத்தின் வசம் உள்ள காலியிடங்களை பயன்படுத்தி திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அதனை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பயன்படுத்துவதை ஒருகாலும் அனுமதிக்கமுடியாது என தலைவர்கள் நிர்வாகத்திடம் உறுதிபட தெரிவித்தனர்.

மேலும் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை தங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனவும் , இது குறித்து  நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கும் வகையில்  BSNL BOARD உடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் நமது NFTE மத்திய சங்கத்தின் விரிவடைந்த தேசிய செயற்குழு கூட்டம் மைசூர் RTTC பயிற்சி கேந்திர வளாகத்தில் வரும் ஜீன் மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.