16 May 2019

வணிகப்பகுதி என்ற பெயரில் மாவட்டங்களை இணைக்காதே...
ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல்..

BSNL நிர்வாகம் ஊழியர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையிலும் வணிகப்பகுதிகளை உருவாக்கும் நோக்கில் மாவட்டங்களை இணைப்பதை முழுவீச்சோடு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து தமிழ் மாநில அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக மாவட்டங்கள் இணைப்பது நிறுவனத்திற்கு பயனளிக்காது எனக் கூறி கடிதமும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மாநில நிர்வாகம் வணிகப்பகுதி உருவாக்கத்தை  செயல்படுத்துவதற்கான வேலைகளை மிகவும் சிரத்தையோடு செய்து வருகிறது. 

வணிகப்பகுதி உருவாக்கத்திற்கு நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து கிளைகளிலும் 17/05/2019 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில அனைத்து BSNL ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்த்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம் தோழர்களே!