செய்திகள்
- தமிழ் மாநில NFTE சங்கத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் வருகிற 13.05.2019 திங்கள் அன்று திருச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருண் Maxi Hall அறையில் நடைபெறும் என மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.
- BSNL நிறுவனத்தில் மாநிலங்கள் இணைப்பு , ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது ஆகியவை குறித்து BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு ஆங்கில நாளிதழ் செய்தி வெளிட்டிருந்தது. இது குறித்து விளக்கம் பெற நமது மத்திய சங்கம் BSNL CMD அவர்களை நேற்று 07.05.2019 அன்று சந்தித்தது. அப்போது நாளிதழ் வெளியிட்ட செய்தியை நமது CMD முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் விருப்ப ஓய்வு திட்டம் தற்போதைக்கு அரசின் பரிசீலனையில் இல்லை எனவும், புதிய அரசுதான் அது குறித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.