Business Area அமுலாக்கத்தை நிறுத்தி வைத்திடுக...
தமிழ்மாநில நிர்வாகத்திற்கு அனைத்து சங்க கூட்டமைப்பு கோரிக்கை..
2019 ஜீன் 1ம் தேதி முதல் மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வணிகப்பகுதிகள் உருவாக்கப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி நமது தமிழ் மாநிலத்திலும் வணிகப்பகுதிகள் உருவாக்கம் குறித்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
நேற்று 07.05.2019 அன்று தமிழ் மாநில அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக பிரதிநிதிகள் தலைமைப் பொதுமேலாளரைச் சந்தித்து வணிகப்பகுதிகள் உருவாக்கத்தை தற்போதைக்கு தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் கூட்டமைப்பின் சார்பாக கடிதம் தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் வணிகப்பகுதிகள் உருவாக்கம் தேவையற்றது எனவும், தற்போதை நிதி நெருக்கடியான சூழ்நிலையில் நிர்வாகத்தின் இம்முடிவு நிர்வாகத்திற்கு மேலும் செலவு ஏற்படுத்தக் கூடியது எனவும், வணிகப் பகுதிகளை உருவாக்குவதால் நிர்வாகத்திற்கு இலாபம் ஏதும் ஏற்படப்போவதில்லை எனவும், ஊழியர்களை ஊக்கப்படுத்தாது எனவும், வருவாயைப் பெருக்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான முயற்சிகளில் நிர்வாகம் ஈடுபடவேண்டும் எனவும் கூறி தமிழ்மாநில அனைத்து சங்க கூட்டமைப்பு தலைமப் பொதுமேலாளருக்கு இன்று (08.05.2019) கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து கார்ப்பரேட் அலுவலகத்துடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.