30 September 2019

செய்திகள்


01.10.2019 முதல் நமது  BSNL நிருவனம் 
தனது 20வது ஆண்டில் நுழைகிறது
அனைவருக்கும் விருதுநகர் 
மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


01.10.2019 முதல் பஞ்சப்படி 5.3% கூடவுள்ளது. இத்துடன் சேர்த்து பஞ்சப்படி 
      152% சதவிகிதத்தை எட்டியுள்ளது.
(146.7% + 5.3%=152%)
  

நமது NFTE சங்கத்தின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் BSNL புத்தாக்க கோரிக்கை மாநாடு வரும் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்தில் கடலூரில் நடைபெறவுள்ளது. 


நமது NFTE சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் வரும் நவம்பர் மாதம் 10 மற்றும் 11 நடைபெறவுள்ளது.


4G அலைக்கற்றை ஒதுக்கீடு, BSNL ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கிடு , 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU, SNEA , AIBSNLEA , BSNL MS, BSNL ATM , BSNLOA ஆகிய சங்கங்கள் Unions and Assoications of BSNL என்ற பெயரில்  நாளை 01.10.2019 அன்று BSNL உயமான தினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.