27 September 2019


எதிர்காலச் செயல்பாடுகளை திட்டமிட்ட தஞ்சை மாவட்டச் செயலர்கள் கூட்டம்...


NFTE தமிழ் மாநிலச் சங்க மாவட்டச் செயலர்கள் கூட்டம் நேற்று 26.09.2019 அன்று தஞ்சையில் மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலகட்டத்தில் தஞ்சை தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

தஞ்சை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் சுவாமிநாதன் தலைமையிலான தோழர்கள் உணவு ஏற்பாடுகளைச் செய்ததோடு மட்டுமின்றி 8வது தேர்தலில் தமிழத்தில் 50%க்கும் அதிகான வாக்குகளை பெற்றுத்தந்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நமது மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனர். 

மகளிர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழியர் லைலாபானு அவர்கள் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். 

தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் கிள்ளிவளவன் தோழர்களை வரவேற்று பேசினார். 

மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழியர் லைலாபானு அவர்கள் வரவேற்புரையாற்றினார். 

தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் துவக்க உரையாற்றினார். 

தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் சுவாமிநாதன் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சிறப்பான முடிவுகளை எட்டிட வேண்டும் எனக்கூறி வாழ்த்தினார். 

மாநிலச் செயலர் தோழர் நடராஜன் கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். 

மாநிலச் செயலரின் அறிமுக உரையைத் தொடர்ந்து மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் ஆய்படு பொருள் மீதான தங்களது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர். 


தோழர் ராபர்ட்ஸ், கோவை - தோழர் ரெங்கன், குன்னூர் 

தோழர் கிள்ளிவளவன், தஞ்சை - தோழர் விஜய் - கும்பகோணம் 

தோழர் பாலகண்ணன், தூத்துக்குடி - தோழர் சம்பத்குமார், விருதுநகர் 

தோழர் லாசர், ஈரோடு - தோழர் அல்லிராஜா,வேலூர் 

தோழர் மாரி, காரைக்குடி - தோழர் ராஜேந்திரன், மதுரை 

தோழர் குழந்தைநாதன், கடலூர் - தோழர் கனேசன், நெல்லை 

தோழர் லட்சுமணபெருமாள், நாகர்கோவில் ஆகிய மாவட்டச் செயலர்களும் 


தோழர் முரளிதரன், சென்னை -தோழர் சண்முகம், தென்காசி 
தோழர் =தர், கடலூர் - தோழர் செந்தில், மதுரை - தோழர் ரமேஷ், விருதுநகர் ஆகிய மாநிலச் சங்க நிர்வாகிகளும் 


தோழர் செம்மல் அமுதம் மற்றும் தோழர் பழனியப்பன் ஆகிய மத்திய சங்க நிர்வாகிகளும்விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். 


தஞ்சை மாவட்ட சேவா சங்க மாவட்டச் செயலர் தோழர் முருகன் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

மாநிலப் பொருளாளர் தோழர் சுப்பராயன் மாநிலச் சங்கத்தின் நிதி நிலைமை குறித்த அறிக்கைகையை முன்வைத்து உரையாற்றினார். 

தோழர் சேது தனது வாழ்த்துரையில் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். 

இறுதியாக மாநிலச் செயலர் தோழர் நடராஜன் தோழர்கள் முன்வைத்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தொகுப்புரையாற்றினார். 


பின்பு மாவட்டச் செயலர்கள் கூட்டம் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை மாநிலச் செயலர் தோழர் நடராஜன் முன்வைத்தார். 

1. எட்டாவது தேர்தலில் NFTE சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட மாநில, மாவட்ட , கிளைச் சங்கத் தோழர்கள் , கூட்டணித் தலைவர்கள் மற்றும் முன்னனித் தோழர்களுக்கு மாவட்டச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கும் தீர்மானமும். 

2. குறுகிய காலகட்டத்தில் மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த தஞ்சை மாவட்ட NFTE, AIBSNLPWA மற்றும் TMTCLU சங்க தோழர்களுக்கு மாவட்டச் செயலர்கள் கூட்டம் தனது நன்றிகளை தெரிவிக்கும் தீர்மானமும். 

3. தேர்தலில் பணியாற்றிய மற்றும் NFTE சங்க வெற்றிக்காக பாடுபட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புக்க்கூட்டம் ஒன்றினை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அழைத்து BSNL புத்தாக்க கோரிக்கை மாநாடாக கடலூரில் நடத்துவது மாநாட்டு நிதியாக பெரிய மாவட்டங்கள் ரூ.7000/-மும் , சிறிய மாவட்டங்கள் ரூ.3000/-மும் வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. 

மாநாட்டு நிதியின் முதல் தவணையாக ரூ.2500/-ஐ வேலூர் மாவட்டச் சங்கம் கூட்ட அரங்கிலேயே வழங்கியது. மாநிலப் பொருளர் தனது பங்களிப்பாக ரூ.2000/-ஐ மாநாட்டு நிதியாக வழங்கினார் 

4. சேவா உள்ளிட்ட சங்கங்களை இணைத்து பரந்துபட்ட ஒற்றுமையான அமைப்பாக AUAB கூட்டமைப்பை பலப்படுத்தி BSNL புத்தாக்கம் , 3வது ஊதிய மாற்றம் ஆகிய கோரிக்கைகளுக்காக வலுவான போராட்டங்களை கட்டமைப்பது என தீர்மானிகக்கப்பட்டது. 

5. LIC, BANK MOU ஆகிய சம்பளப் பிடித்தங்களை உரிய தேதியில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு செலுத்திடவும், ஊழியர்களின் சம்பளத்தை உரிய நாளில் வழங்கிட வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது , மத்திய சங்க தலைவர்கள் மூலமாக நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்ட வடிவங்களை முன்னெடுப்பது எனவும் அதன் முதற்கட்டமாக தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை வரும் அக்டோபர் 10ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 


6. நின்று போயுள்ள 3வது ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்குவது 

7. வணிகப்பகுதி உருவாக்கத்தில் தேவையான மாற்றங்களை மாநிலச் சங்கத்துடன் கலந்து பேசி மறு உருவாக்கம் செய்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 


தோழர் சுந்தர்ராஜன் நன்றி கூறிட கூட்டம் இனிதே நிறைவுற்றது.