BSNL புத்தாக்கம்
AUAB தலைவர்கள் CMD சந்திப்பு
CMD., BSNL அவர்களது அழைப்பின் பேரில் AUAB தலைவர்கள் CMD ஐ நேற்று 24.10.2019 அன்று சந்தித்தனர். CMD AUAB தலைவர்களிடம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த BSNL புத்தாக்கத் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். அதன்படி;
1. காலியிடங்களை பணமாக்கும் திட்டம் மூலமாக ரூ.20,000/- கோடி திரட்டப்படும். இந்நடவடிக்கையை DIPAM (Deparment of Investment and Public Asset Management) துறை மேற்கொள்ளும்.
2. BSNL 4G அலைக்கற்றை டிசம்பர்2019 இறுதிக்குள்ஒதுக்கப்படும். நாடு முழுவதும் 60000க்கும் மேற்பட்ட 4G டவர்கள் நிறுவப்படும்.
3. மொத்தமுள்ள 106304 பேரில் 50வயதுக்கு மேற்பட்ட 80,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அமுல்படுத்தப்படும். விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கருணைத்தொகை வழங்குவதற்கு ஆகும் கூடுதல் நிதியாக ரூ.14800/- கோடியை அரசே ஏற்கும்.
4. விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கும் வகையில் ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய மற்றும் கூடுதல் பலன்கள் பற்றிய விபரங்கல் கூடிய விரைவில் ERP/ESS portalலில் பதிவேற்றம் செய்யப்படும்.
5. விருப்ப ஓய்வுப் பலன்கள் குஜராத் மாதிரியில் இருக்கும் ( பணி புரிந்த காலத்திற்கு வருடத்திற்கு 35 நாட்கள் ஊதியமும், மீதமுள்ள சேவைக்காலத்திற்கு வருடத்திற்கு 25 நாட்கள் ஊதியமும் வழங்கப்படும்) மாதச்சம்பளத்தில் 125%க்கு மிகாத அளவிற்கு இருக்கும்.
6. 125% ஊதியம் என்பது கம்முடேசன் அல்லாத பென்சன் தொகையையும் உள்ளடக்கியது .
7. விருப்ப ஓய்வுத்திட்டம் அமுலாக்கம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். விருப்பம் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
8. கருணைத்தொகை மற்றும் லீவ் சம்பளம் ஆகியவை இரு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டிலும், இரண்டாவது தவணை அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் வழங்கப்படும்.
9. 55 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு Gratuity மற்றும் Commuted value of Pension ஆகியவை ஊழியர்கள் தங்களது 60வது வயதை அடையும் போது வழங்கப்படும் அல்லது விருப்ப ஓய்வு பெற்றதிலிருந்து 6 வருடங்கள் கழித்தோ அல்லது இவ்விரண்டில் எது விரைவில் வருகிறதோ அப்போது வழங்கப்படும்.
10. விருப்ப ஓய்வுக்கு அரசு எதிர்பார்த்த அளவிற்கு ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என குறைத்து அமுலாக்கப்படும்.