23 October 2019

BSNL புத்தாக்கத்திற்கு 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

நீண்ட காலமாக முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்த BSNL, MTNL நிறுவனங்களின் புத்தாக்கத் திட்டத்திற்கு இன்று 23.10.2019 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புத்தாக்க திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  • BSNL, MTNL நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இரு நிறுவனங்களையும் கேந்திரமான துறையாக அரசு கருதுகிறது. மேலும் இருநிறுவனங்களையும் தனியார் மயப்படுத்தவோ, விற்கவோ அரசு ஒரு போதும் முயலாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. BSNLலுடன் MTNL இணைக்கப்படும். இணைப்பு முழுமை பெறும்வரை MTNL நிறுவனம் BSNL நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும். 

  • இரு நிறுவனங்களுக்கும் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான முதலீடாக ரூ.20,140/- கோடி ருபாயை அரசே வழங்கும் மேலும் அலைக்கற்றை மீதான GST வரிக்காக ரூ.3674/- கோடியை அரசே ஏற்கும். 

  • மூலதன நிதியாக ரூ.20,140/- கோடி அரசு முதலீடு செய்யும். 

  • நீண்ட கால கடன் பத்திர வெளியிடுவதன் மூலம் ரூ.15000/- கோடி அளவிற்கு நிதி திரட்ட அரசு உத்தரவாதம் வழங்கும். 

  • 50 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருப்ப ஓய்விற்கான கூடுதல் நிதியான ரூ.17169/- கோடியை அரசே வழங்கும். மேலும் பென்சன், கிராஜுட்டி,கம்முடேசன் வழங்குவதற்கான செலவையும் அரசே ஏற்கும். 

  • காலியிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய் ஈட்ட வழிவகை செய்யும் நில மேலாண்மைத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கும். 


புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்து விவாதிக்க அனைத்து சங்க தலைவர்களை 24.10.2019 அன்று மாலை 4 மணிக்கு CMD அழைத்துள்ளார்.