உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது...
AUAB சார்பாக நாளை 18.10.2019 அன்று நடைபெறவிருந்த நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 17.10.2019 மாலை 03.00 மணி அளவில் AUAB தலைவர்கள் CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் வரும் 23.10.2019 அன்று பட்டுவாடா செய்யப்படும் என CMD உறுதியளித்துள்ளார்.
BSNL புத்தாக்கம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு நிதிஉதவி உள்ளிட்ட விசயங்கள் வரும் 23.10.2019 அன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என தான் நம்புவதாகம் அந்த நம்பிக்கையோடு நாம் அனைவரும் காத்திருப்போம் எனவும் கூட்டமைப்பின் தலைவர்களிடம் CMD தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஆயத்த பணிகளைச் செய்த அனைத்து சங்க தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.