இணைந்தே செல்வோம்... இலட்சியத்தை எட்டுவோம்....
தோழர்களே! தோழியர்களே!
நமது AUAB அகில இந்திய கூட்டமைப்பின் கூட்டம் 11.10.2019 அன்று NFTE சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் அவர்களது தலைமையில் டெல்லியில் கூடியது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு மற்றும் BSNL நிர்வாகத்தை எதிர்க்கும் விதமாக மத்திய, மாநில, மாவட்டத் தலைநகரங்களில் 18.10.2019 அன்று ஒருநாள் தேசம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
1. செப்டம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்கு! மாதம் தோறும் ஊதியத்தை உரிய தேதியில் வழங்கு !
2. ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கேசுவல் ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கு மேலும் தாமதமின்றி மின் கட்டணம், வாடகை பாக்கி ஆகியவற்றை வழங்கு...
3. BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய உடனடியாக 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , நிதிஉதவி கடன் ஏற்பாடு , BSNL சொத்துக்களை விற்க அனுமதி ஆகியவற்றை உடன வழங்கு...
4. 3வது ஊதியமாற்றம், ஓய்வூதிய மாற்றம், BSNL நேரடி ஊழியர்களின் 30% ஓய்வூதியப்பலன்கள் ஆகியவற்றை உடனடியாக அமுல்படுத்து...
5. EPF,SOCIETY, LIC, PLI பிரிமியம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வரவேண்டிய சந்தா தொகை ஆகியவற்றை உடனே வழங்கு...
அதனைத் தொடர்ந்து நமது விருதுநகர் மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என திட்டமிட விருதுநகர் மாவட்ட AUAB அமைப்பின் கூட்டம் இன்று 16.10.2019 அன்று முற்பகல் 12 மணி அளவில் NFTE மாவட்டச் சங்க அலுவலகத்தில் கூடியது.
கூட்டத்தில் BSNLEU சங்கத்தின் சார்பாக மாவட்டத்தலைவர் தோழர் R.ஜெயக்குமார், மாவட்ட உதவிச் செயலர் தோழர் C.சந்திரசேகரன் , மாவட்டப் பொருளாளர் தோழர் S.பாஸ்கரன் ஆகியோரும், NFTE சங்கத்தின் சார்பாக மாவட்டப் பொறுப்புச் செயலர் தோழர் P.சம்பத்குமார், மாவட்ட உதவிச் செயலர் தோழர் P.பாஸ்கரன், மாநில உதவிச் செயலர் தோழர் D.ரமேஷ் ஆகியோரும், SEWA BSNL சங்கத்தின் சார்பாக மாநிலத் துணைச்செயலர் தோழர் R.பிரேம்குமார், AIBSNLEA சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் M.பிச்சைக்கனி, SNEA சங்கத்தின் சார்பாக மாவட்டப் பொறுப்புச் செயலர் தோழர் G.செல்வராஜ் , AIOBC சங்கத்தின் சார்பாக தோழர் S.கார்த்திகேயன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து சங்க தோழர்களையும், தோழியர்களையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வைத்து போராட்டத்தை வெற்றிகரமாக்குவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் போராட்டத்திற்கான செலவினங்களை பங்கிடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.
தோழர்களே!
நாடும், நமது நிறுவனமும், நமது எதிர்காலமும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நமது அனைத்து சங்க கூட்டமைப்பில் FNTO, BTEU, AIBSNLOA ஆகிய சங்கங்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் வலிமையான அமைப்பாக AUAB உருப்பெற்றுள்ளது.
நமது மனமாச்சரியங்களை புறந்தள்ளிவிட்டு BSNLன் வளம் காக்க, நமது எதிர்கால வாழ்வு ஒளிபெற நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவது நமது அனைவரின் கடமை.
தோழர்களே! அணிதிரள்வோம்! வெற்றிபெறுவோம்!
தோழமையுடன் அழைக்கும்
தோழர் S.ரவீந்திரன் தோழர் P.சம்பத்குமார்
ஒருங்கிணைப்பாளர் தலைவர்
அனைத்து BSNL அதிகாரிகள், ஊழியர்
சங்கங்களின் கூட்டமைப்பு
BSNLEU | NFTE BSNL | SEWA BSNL | FNTO | TEPU | AIOBC | SNEA | AIBSNLEA | AIBSNLOA
விருதுநகர் மாவட்டம்