ஜூன் - 7
தோழர் ஜெகன் நினைவு தினம்
தோழர்களே ,
நமது தானைத் தலைவன் தோழர் ஜெகன் அவர்களது நினவுதினம். ஒப்பந்த ஊழியர் வாழ்வினில் ஒளி விளக்கேற்றியதில் தமிழ் மாநிலத்தின் சார்பில் அவரது பங்கு ஈடுஇணையற்றது.
தோழர் குப்தா அவர்களது தோளோடு தோளாக பயணித்தவர். தோழரின் மறைவு நமது இயக்கத்திற்கு பெரும் இழப்பு தான் எனினும் அவரது எண்ணங்களை , செயல்பாடுகளை நாமும் உள்வாங்கி தொழிலாளி வர்க்கத்தின் நலன் காக்க, அன்னாரது லட்சியம் நிறைவேற்றிட லட்சியத் தலைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே.
தோழர்களே தோழர் ஜெகனின் நினைவைப் போற்றும் வகையில் இன்றைய தினம் நமது இயக்கம் சார்பில் தோழர் ஜெகன் கலை இலக்கிய மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வமைப்பிற்கென comjegankim.blogspot.com என்ற பெயரில் ஒரு இணையதளமும் துவக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தை தஞ்சை தோழர் வல்லம் தாஜ்பால் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
தோழர்களே தோழர் ஜெகன் அவர்களின் நினைவைப் போற்றும் இத்தருணத்தில் கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
