14 May 2020




மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் 

காணொளிக் கூட்டம்

கொரானா ஊரடங்கு சமயத்தில் மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையில் Zoom செயலின்  வழியாக நமது மாவட்ட செயலாளர்கள், மாநில சங்க நிர்வாகிகள் இன்னும் பல தோழர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நேற்று 13.05.2020 ல் மாலை 5 மணி முதல் 3மணி நேரம்  மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில் 14 மாவட்ட செயலாளர்களும், மாநில பொருளாளர் தோழர் சுப்பராயன், சம்மேளன சிறப்பு அழைப்பாளர் மரியாதைக் குரிய தோழர் செம்மல் அமுதம், மூத்த தோழர் சென்ன கேசவன் உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து     கொண்டனர்.
    
கீழ்கண்ட விவாதங்கள்  நடைபெற்றன.    
          
·        VRS ல் சென்றவர்களுக்கு நிறுவன ரீதியான வழக்குகள் அன்றி வேறு போலீஸ் மற்றும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தவர்களுக்கு அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது நிர்வாகம். நமது அகில இந்திய சங்கம் தலையிட்டதற்கப் பின்னால் Leave encashment paymentக்கு உத்தரவை மாநில நிர்வாகத்தால் 11.05.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
      

·        Outsourcing விடுவதை பொருத்தமட்டில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான வேலையை செய்துவருகிறது. அனைத்து மாவட்ட சங்க, மாநில பொறுப்பாளர்களின் விவாதத்திற்குப் பிறகு இது தவிர்க்க இயலாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இந்த ஒப்பந்த முறை அமுலாக்கத்தில்  மாவட்ட சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே நமது இறுதியான முடிவாக இருக்கிறது. ஏற்கனவே பணியாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுடைய நலன் பாதிக்காத வகையிலும் மாநிலம் முழுவதும் ஒரே சம்பளம் முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் கவலையோடு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டது.மாநில நிர்வாகத்திடம் இது குறித்து பேசி மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுவான வழிகாட்டுதல் தர கோரலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.                   


·        மாவட்டங்களில் ஏற்கனவே ஒப்பந்த முறையில் பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் அதனுடைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF,ESI  போன்றவற்றை முறையாக கட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், அப்படி கட்டாத நிறுவனங்களுக்கு  அவர்களுக்கு தரக்கூடிய  செக்யூரிட்டி டெபாசிட்டை முடக்கி வைக்க வேண்டும்  என உடனடியாக மாவட்ட செயலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் தர வேண்டும்.இதன் மூலம் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  சேர வேண்டிய EPF ,ESI பெற்றுத் தருவது.

·        சொசைட்டி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை நிர்வாகத்திடம் இருந்து விரைந்து பெற்று அனுப்புவதும் நம் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத் தருவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.          

·        சொசைடியில் உறுப்பினராக இருந்து இயற்கை எய்திய தோழர் சந்திரசேகர் அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் தொகை கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பது. 

·        இதர மத்திய அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிற கொரானா இன்ஷூரன்ஸை நமது நிறுவன ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என அகில இந்திய சங்கம் கடிதம் எழுதியிருப்பதைஎழுதியிருப்பதை வரவேற்கும் அதே சமயத்தில் விரைந்து பெற்றுத்தர மாநில சங்கம் வலியுறுத்துகின்றது.  
     
·        மாவட்ட கவுன்சில்  அதாவது local JCM உறுப்பினர்கள் பட்டியலை மாவட்ட செயலர்கள் விரைந்து அனுப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

·        Corona lock down  period should be treated as duty. இந்த காலத்திற்கு மாவட்ட நிர்வாகங்கள் லீவு அளிக்குமாறு கேட்டால் அது மாநில மட்டத்தில் பேசி சரி செய்யப்படும்.

·        MOU கடனுக்கான அபராத வட்டி குறித்து அகில இந்திய மட்டத்தில் பேசியிருக்கிறோம் தொடர்ந்து பேசுவோம்.

·        Digital life certificate 2019 விருப்ப ஓய்வில் ஊழியர்கள் செல்வதற்கு முன்பாக உள்ள காலத்திற்கு கோரப்பட்டிருக்கிறது. 2019 விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு கேட்கப்படவில்லை. ஓராண்டு முடிந்ததற்குப் பின்னால் அவர்களுக்கு கோரப்படும். தற்பொழுது தேவையில்லை.
                                                                                          
·        After implementation of outsourcing TT,ATT தோழர்களுடைய பணி இட மாற்றம் குறித்து மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டால் அதை நாம் ஏற்பதற்கில்லை.

·        4G சேவை தருவதில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகளை விரைந்து தீர்த்திட வேண்டுமென AUAB பிரதம அமைச்சர் , துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு ம்,CMDஅவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. தேவை எனில் அதன் மீது ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என நமது உணர்வை பதிவு செய்கிறோம்.


·        விருப்ப ஓய்வு அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறையும் என்றும் எஞ்சியிருக்கிற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மாதந்தோறும் சம்பளம் முறையாக வழங்கப்படும் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த மாதம் சம்பளம் காலதாமதமானது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்று காலதாமதம் எதிர்காலத்தில் இல்லாமல் தவிர்க்கப்பட வேண்டும் என இந்த விவாதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

·        FTTH என்பது ஒரு தொழில் நுட்ப மாற்றம் காரணமாக வந்திருக்கிற முன்னேற்றம். இதில் ஏற்கனவே வருவாயை தந்து கொண்டிருக்க கூடிய Board band closure அதிகமாகி வருவது கவலையளிக்கிறது. அதனையும் FTTH ஏஜென்சி எடுத்த serving employee செய்வது சரியல்ல என பகிர்ந்து கொள்ளப்பட்டது.இது குறித்த புகாரை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிட வேண்டும் அதன் மீது விஜிலன்ஸ் என்கொயரி நடத்தப்பட வேண்டும் என்ற புரிதல்  வந்திருக்கிறது.

                                                               
·        திருச்சியில் நடத்துவதாக இருந்த மாநில மாநாடு இந்த கொரானா ஊரடங்கு காரணமாக தாமதப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு முடிந்ததற்கு பின்னால் விரைவாக நடவடிக்கை எடுத்து அதற்கான வேலையை தொடங்கிட வேண்டும்.    

     விவாதத்தில் கலந்துகொண்டு நல்ல முறையில் ஆலோசனை வழங்கிய அனைத்து மாவட்ட செயலர்களுக்கு, மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் நல்ல முறையில் ஒருங்கிணைத்து இந்த கூட்டத்தை நடத்திய மாநில தலைவர் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.     

தோழமையுள்ள

            K. நடராஜன்
மாநிலச் செயலர்
NFTE BSNL