BSNL புத்தாக்க நடவடிக்கைகளை விரைவு படுத்தல்
, BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை
ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் TEPC என்ற தனியார் கூட்டமைப்பு எழுப்பிய ஆட்சேபங்களின்
அடிப்படையில் வர்த்தக அமைச்சகம் எழுப்பிய தடையின் அடிப்படையில் 4G டெண்டர் ரத்து செய்யப்பட்டது
, BSNL நிறுவனத்தின் செல்கோபுரங்களை
தரம் உயர்த்தல் ஆகிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில்
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிப்பது என்ற அனைத்து சங்க கூட்டமைப்பின்
அறைகூவலின் படி இன்று 28/07/2020 அன்று விருதுநகர் மாவட்ட அனைத்து சங்க கூட்டமைப்பின்
சார்பாக விருதுநகர் தொகுதி பாராளு மன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களிடம்
மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் டெல்லி சென்றுவிட்ட காரணத்தினால்
அவரது உதவியாளர் வசம் இன்று மனு அளிக்கப்பட்டது.
BSNLEU சார்பாக
தோழர் சமுத்திரகனி, தோழர் முத்துசாமி , தோழர் சந்திரசேகரன், தோழர் இளமாறன் , தோழர்
மாரியப்பா ஆகியோரும் NFTE சார்பாக தோழர் சம்பத்குமார் , தோழர் ரமேஷ் , தோழர் மகேஸ்வரன்
ஆகியோரும் FNTO சார்பாக தோழர் பாண்டுரெங்கன் அவர்களும் SNEA சார்பாக தோழர் செந்தில்குமார்
அவர்களும் AIBSNLEA சார்பாக தோழர் ஜேசுராஜா
அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.