30 January 2021


GROUP TERM INSURANCE
குழுக்காப்பீட்டுத் திட்டம்

Voluntary Group Term Insurance Scheme for BSNL Employees (Non-Executive)


GROUP TERM INSURANCE எனப்படும் குறிப்பிட்ட காலவரையறைக்கான குழுக்காப்பீடு BSNL அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்த காப்பீட்டுத்திட்டம் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சங்கங்களால் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதனடிப்படையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LICயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

· BSNL ஊழியர்கள் அனைவரிடமும் விருப்பம் கேட்கப்பட்டு திட்டம் அமுல்படுத்தப்படும்.

· ஆயுள் காப்பீட்டுத்திட்டம் தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயமில்லை.

· ஆயுள் காப்பீட்டுத்தொகை ரூ. 20 லட்சம்

· கால அளவு : ஓய்வு பெறும் வயதை அடையும் வரை

· Premium தொகை

1. 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.3776/= ( GST உட்பட )

2. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.18172/= ( GST உட்பட )

· ஆண்டிற்கு ஒருமுறை சம்பளத்தில் பிடிக்கப்பட்டு LIC நிறுவனத்திற்கு Premium தொகை செலுத்தப்படும்


வழிகாட்டு நெறிமுறைகள்

· காப்பீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் : 01.03.2021

· 01.03.2021 அன்று பணியில் உள்ள BSNL ஊழியர்கள் (Non-Executives) அனைவரும் இத்திட்டத்தில் இணைய தகுதியுள்ளவர்கள் ஆவர்.

· திட்டத்தில் இணைய ESS Portalல் வழியாக ஊழியர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

· திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியர்கள் 01.02.2021 முதல் 15.02.2021 அன்று மாலை 05 மணி வரை தங்களது விண்ணப்பத்தை தெரிவிக்கலாம். இணைய வழியாகவே தங்களது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதுவே இறுதியானது மற்றும் தகுதியானது. எழுத்து மூலமாக விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

· திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியர்கள் ESS Portalல் “ I WISH TO JOIN “ என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

· அதுபோல திட்டத்தில் இணைந்த ஊழியர்கள் தங்களது விருப்பத்தை விலக்கிக் கொள்ள விரும்பினால் 16.02.2021 முதல் 18.02.2021 வரை ESS Portalல் “ I WISH TO WITHDRAW “என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களது விருப்பத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

· ஊழியர்கள் தங்களது விருப்ப மனுவை தேவைப்படின் அச்சுப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம். விருப்ப மனுவில் எங்கும் கையெழுத்திடவோ மேலதிகாரியிடம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை.

· திட்டத்திற்கான பிரிமியத் தொகை வரும் பிப்ரவரி-2021 சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.அதன்பின் எவ்வித பிடித்தங்களுக்கும் அனுமதி கிடையாது. எந்த சூழ்நிலையிலும் ஊழியர்களின் விலகல் கோரிக்கைகளோ, பிடித்தம் செய்யப்பட்ட பிரிமியம் தொகையினை திரும்பக் கோறும் கோரிக்கைகளோ அனுமதிக்கப்படாது.

· ஒருவேளை, ஊழியர் ஒருவர் தனது விருப்பத்தை தெரிவித்து பிரிமியத்தொகையும் பிப்ரவரி-2021 சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிறகு அவர் 01.04.2021க்கு முன்னால் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலோ, ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது இறக்க நேர்ந்தாலோ அவர் நடப்பு ஆண்டில் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் வரமாட்டார். இத்தகைய நிகழ்வுகள் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும். அவரிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிரிமியத் தொகை தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு திருப்பித் தரப்படும்.

· அனைத்து ஊழியர்களும் திட்ட ஆவணங்களை முழுவதுமாக ஆராய்ந்து தெளிந்து திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திட்ட ஆவணங்கள் Intranet தளத்தில் தனியாக வெளியிடப்படும்.