3 February 2021

 REALITY IN DARK

இருளில் அடைபட்டுள்ள உண்மைநிலை


BSNL/ MTNL நிறுவனங்களின் நிதி நிலைமை வளர்ச்சிப்போக்கில் நகர்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து ஜனவரி 2021ல் தொலைத்தொடர்பு இலாகாவும் அறிக்கை வெளியிட்டது. நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கைகளினால் தங்களது பொருளாதார நலன்கள் புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு வரும் BSNL ஊழியர்களுக்கு இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். அவர்கள் நீண்டகாலமாக தங்களது பணி உயர்விற்காக காத்துக் கிடக்கிறார்கள். ஊடகச் செய்தி நிறுவனம் லாபத்தை நோக்கி நகர்வதாக கூறினாலும் அவர்களால் இது உண்மைதான் என நம்பமுடியவில்லை ஏனெனில் அவர்களது ஊதியம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரியான தேதியில் வழங்கப்படுவதில்லை. இப்போதும் கூட சம்பளம் வழங்குவதற்கான ஒரு நிலையான தேதி நிர்ணயிக்கப்படாமலே இருந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் நிதி வளர்ச்சிப் போக்கு குறித்த செய்திகள் ஊழியர்களுக்கு சந்தோசத்தை அளிக்கவில்லை. மாறாக அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து எதிர்மறை செய்திகளே உலாவுகின்றன. மதிப்புக்குரிய தொலைத்தொடர்பு இலாகா அமைச்சரால் புத்தாக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டபிறகும் எவ்வித முன்னேற்றங்களும் நிதர்சனத்தில் தென்படவில்லை. சேவைப்பராமரிப்பு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுவிட்டன. ஆனால் அனேக தரைவழி, பிராட்பேண்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்ந இரண்டு இருண்ட ஆண்டுகளில் அநேகமாக அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் அவர்களது ஊதியம் வழங்கப்படாமலேயே வீட்டுக்கு அனுப்ப பட்டுவிட்டனர். ஒப்பந்ததாரர்கள் தங்களது வேலையை துவக்காமல் உண்மையில் வேலையில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்களை மறைக்கவே செய்கிறார்கள். விருப்ப ஓய்வுத் திட்டம் அமுலானதற்கு பின் விடுபட்ட நிரந்தர ஊழியர்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். நிர்வாக பதவி உயர்வுத் தேர்வுகள் நடத்தப்படாமலும் புதிய பதவி உயர்வுத்திட்டம் பரிசிலைனைக்கு எடுக்கப்படாமலும் உள்ளன.

இளநிலைப் பொரியாளர்கள் தங்களது JTO பதவிக்கான தேர்விற்கு 7,8 ஆண்டுகள் கடந்தும் காத்துக் கிடக்கிறார்கள். ஜனநாயகத்துவமான வெளிப்படையான கலந்துரையாடல்கள் / முடிவுகள் மற்றும் தங்களது பிரச்சினைக்காக வெளிப்படையாக குரல் எழுப்பக்கூடிய சூழ்நிலை என்பது கடந்தகால வரலாறாகிவிட்டது.

இந்தகைய சூழ்நிலையில் ஊழியர் சங்கங்கள் நிர்வாகத்தேர்வு அறிவிப்பினை வெளியிட வைத்தல், 01.10.2020 முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை விடுவித்தல், நிலுவையில் உள்ள மருத்துவப்படி, பயணப்படி போன்றவற்றிற்காக போராட வேண்டியதுள்ளது. 3வது ஊதிய மாற்ற கோரிக்கை ஊழியர்களின் மனதை துளைத்து வருகிறது. அவர்கள் தொழிற்சங்கத்தின் கதவைத் தட்டி வருகிறார்கள்.

2021ம் ஆண்டில் ஊழியர்களுக்காக நாம் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நமது பணியை முடிக்க தேவையான ஒற்றுமையை நமது இயக்கத்துக்குள்ளும் பரந்து பட்ட ஒற்றுமையை சங்கங்களுக்கும் இடையேயும் கட்டுவதுதான் காலத்தின் தேவை. ஊழியர்களின் குறைந்தபட்ச பொதுவான கோரிக்கைகளுக்காகவும், BSNL நிறுவனம் தளைப்பதை உறுதி செய்யவும் தேவையான கடின போராட்டங்களை அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து நடத்திட எப்போதும் NFTE தயாராகவே உள்ளது. NFTE தனது கொள்கை மற்றும் பாரம்பரியம் சார்ந்து தனது முன்னணிப்பாத்திரத்தை வகிக்கும்.

- மத்திய சங்க தலையங்கத்தின் தமிழாக்கம்