26 February 2021

 அஞ்சலி...


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 

மூத்த தலைவரும்.. 

தேசியக்குழு உறுப்பினருமான...

தோழர் தா.பாண்டியன்

அவர்கள் சற்றுமுன் காலமானார்.


தோழரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. 


தோழர் தா.பா. இந்தியாவில் மதங்கள், பொதுவுடமையின் எதிர்காலம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்.


சிறுநீரகத்தொற்று காரணமாக பலமாதங்களாக அவதிப்பட்டு ரத்த சுத்தகரிப்பு சிகிச்சையை மேற்கொண்டு வந்த போதிலும் தவறாது இயக்கபணியை மேற்கொண்டு வந்தார்.


கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டிலும் வீரமிக்க உரையாற்றி தோழர்களை உற்சாகமூட்டினார்.


தோழர் தா.பா. நமது இயக்கத்தின் மீதும் தோழர்கள் மீதும் மிகுந்த பற்றும் தோழமையும் பாராட்டிய தோழர்.


பாசிச மோடியின் அசாரக ஆட்சியின் போது தோழர் நம்மைவிட்டுச் சென்றிருப்பது நமக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்...