21 September 2017


செய்திகள்
 : மாநிலச்செயற்குழு மற்றும் தேசிய செயற்குழு :

     நமது தமிழ்மாநிலச் சங்கத்தின் மாநிலச் செயற்குழு வரும் அக்டோபர் மாதம் 06.10.2017 வெள்ளிக்கிழமையன்று தஞ்சாவூரில் மாஸ் திருமண மண்டபத்தில் மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது ஊதியமாற்றம் , போனஸ் , CSC தனியார் மயம் , நிதிநிலை ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளன. கிளைச்செயலர்கள் தங்களது கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை , கடைசியாக மாநாடு நடந்த தேதி , ஊழியர்களின் மெடிக்கல் மற்றும் மாற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதுமிருப்பின் அதுபற்றிய விபரம் மற்றும் மாநிலச் செயற்குழுவில் கலந்து கொள்ளவிரும்பும் தோழர்களின் விபரம் ஆகியவற்றை மாவட்டச் செயலர் தோழர் ராம்சேகர் அல்லது மாநில உதவிச் செயலர் தோழர் ரமேஷ் ஆகியோரிடம் விரைவில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

     நமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் அக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெறவுள்ளது. ஊதியமாற்றம் , போனஸ் , CSC தனியார் மயம் , நிதிநிலை ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளன.


போனஸ் :

     நமது மத்திய சங்கத்தின் சார்பாக அகில இந்தியச் செயலர்கள்             தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் மற்றும் K.S.குல்கர்னி ஆகியோர் நேற்று கார்ப்பரேட் அலுவலகத்தில் GM(Restructuring) அவர்களைச் சந்தித்து 2014-15, 2015-16 ஆகிய ஆண்டிற்கான போனஸ் வழங்குவது குறித்து விவாதித்தனர். BSNL ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் Director(HR) அவர்களின் அனுமதிக்காக கோப்பு அனுப்பட்டுள்ளதாகவும் GM(Restructuring) அவர்கள் தெரிவித்துள்ளார்.

IUC கட்டணக் குறைப்பு :

     தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குள் செலுத்த வேண்டிய இணைப்புக்கட்டணத்தை நிமிடத்திற்கு 14 பைசாவிலிருந்து 6 பைசா என குறைத்துள்ளது. மேலும் டெர்மினேஷன் கட்டணத்தை ஜனவரி 2020 முதல் முழுவதுமாக ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. பெரும் நெருக்கடியில் உழலும் தொலைதொடர்புத் துறையில் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ரிலையைன்ஸ் நிறுவனத்தின் ஜியோவிற்கே சாதகமாக அமையும் என Cellular Operator Association of India (COAI) கருத்து தெரிவித்துள்ளது.

AIBSNLEA சங்க போராட்டத்திற்கு ஆதரவு :

     AIBSNLEA சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், 3வது ஊதியமாற்றம் தொடர்பாக Affordability சரத்திலிருந்து BSNL நிறுவனத்துக்கு விலக்கு கோரியும் , 15% ஊதிய நிர்ணயம் வழங்கவும் கோரியும்   AIBSNLEA சங்கம் அறிவித்துள்ள  அக்டோபர் 4ம் தேதி பாராளுமன்றம் நோக்கிய மெழுகுவர்த்தி எந்திய பேரணி மற்றும் மாநில மாவட்டத்தலைநகர்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ஆகிய போராடங்களில்  NFTE தலைமையிலான BSNL ஊழியர் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என நமது சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் :

     நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனசாக ரூ.7000/- வழங்கிட வலியுறுத்தி 26.09.2017 அன்று மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் 04.10.2017 அன்று தர்ணா போராட்டம் நடத்துதல் ஆகிய போராட்டத்திட்டங்களுடன் நமது NFTE மற்றும் TMTCLU சங்கங்கள் சார்பாக மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

NEPP பதவி உயர்வுவிளக்கம் :

NEPP பதவி உயர்வுத்திட்டத்தில் மேலும் ஒரு விளக்கத்தை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

     அதன்படி;

           “ 01.10.2004 அன்று NEPP பதவி உயர்வுத்திட்டத்தின் கீழ முதல் பதவி உயர்வு பெற்ற ஊழியர் அதற்குப்பிறகு அதே ஊதிய விகிதத்தில் பதவி எண்ணிக்கை அடிப்படையில் (Post Based Promotion)பதவி உயர்வு பெற்றிருந்தால், NEPP பதவி உயர்வுத்திட்டத்தின் கீழான அவரது இரண்டாவது பதவி உயர்வு 01.10.2004 தேதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்

     நிர்வாகத்தின் இந்த விளக்கத்தின் அடிப்படையில் Driver ஆக பணிபுரியும் தோழர்களே அதிக பயனடைய வாய்ப்புள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான புதிய நடத்தை விதிமுறைகள் :

     BSNL ஊழியர்களுக்கு என BSNL CDA Rules – 2006 என்ற  நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. தற்போது ஒட்டுமொத்தமாக அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் புதிய நடத்தை விதிமுறைகளை அமுல்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி நடத்தை விதிமுறைகளை Department of Public Enterprises பொதுத்துறை நிர்வாகங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கருத்தினை அறிவதற்காக சுற்றுக்கு வெளியிட்டுள்ளது.

பஞ்சப்படி :

     அக்டோபர் 2017 முதல் பஞ்சப்படி 4.5% முதல் 6% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.