19 September 2017

வரவேற்கிறோம்...


      BSNLEU விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் சர்வாதிகாரப்போக்கினைக் கண்டித்து அச்சங்கத்தின் முதன்மை மாவட்ட உதவிச்செயலர் தோழர் வெங்கடப்பன் தலைமையில் விருதுநகர் CTX கிளையின் உதவிச்செயலர் தோழர் முத்துராமலிங்கம் மற்றும் CTX  கிளையின் அமைப்புச்செயலர் தோழர் ராஜசேகரன் ஆகியோர் 18.09.2017 அன்று நடைபெற்ற NFTE சங்கத்தின் DE அலுவலகக் கிளைப்பொதுக்குழுவில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை நல்கினர். 

       தாய்ச்சங்கத்தில் இணைந்துள்ள தோழர்களை விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் வருக ! வருக! என வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் நமது சங்கத்தில் இணையவுள்ள தோழர்கள் மற்றும் தோழியர்களை வருக... வருக... என வாழ்த்தி வரவேற்கிறோம்.