22 June 2018


மாவட்ட செயலர்கள் கூட்ட நிகழ்வுகள்

21/06/2018 அன்று மாவட்ட செயலர்கள் கூட்டம் கிரீம்ஸ் ரோடு மாநிலச்சங்க அலுவலகத்தில் நடை பெற்றது தோழர் ப.காமராஜ் தலைமையேற்றார்.மாநில செயலர் நடராஜன் ஆய்படு பொருளை முன் மொழிந்து ஊழியர் முன் உள்ள பிரச்சனைகளை விளக்கினார். 

தோழர் ஜி.எல்.தார் மறைவுக்கு அவரது பெருமைகளை, பங்களிப்பை போற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாவட்ட செயலர்கள் தங்கள் கருத்தை முன் வைத்தனர்.. 

தோழர் பட்டாபி ஊதிய மாற்றம், அரசின் தொலைத்தொடர்பு கொள்கை, பொதுதுறைகளை சீரழிக்கும் பல்வேறு பாதக திட்டங்கள்,ஊழியர் சங்கங்களின் முன் உள்ள சவால்கள், அமைப்பை பலப்படுத்துதல் , மாநிலச் செயலர் கூட்டத்திற்க்கான முன் மொழிவுகள் ஆகியவற்றை விளக்கி உரை யாற்றினார். 

மதிய உணவு இடைவேளையில் SNEA சங்க புதிய நிர்வாகிகள் நமது சங்க அலுவலத்திற்கு நமது அழைப்பின் பேரில் வருகை புரிந்தனர். புதிய மாநில சங்க நிர்வாகிகளை, மாநிலச் சங்கம் பாராட்டி வாழ்த்தியது.. 

விவாதத்திற்க்குப் பின்னர் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 


  • மாநிலச் சங்க நிதியாக உறுப்பினரிடம் தலா ரூ100/ குறைந்த பட்சம் வசூலித்து அனுப்பிட வேண்டும்.
  • மறைந்த தோழர் ஞானையா அவர்களின் முதலாண்டு (08/07/2018) நினைவேந்தல் நிகழ்ச்சியை கோவையில் நடத்திட முடிவு செய்யப்பட்டது, கோவை மாவட்ட சங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்திட முடிவு செய்யப்பட்டது.தோழர்கள் பங்கேற்க்க திட்டமிடவேண்டும். 
  • அடுத்த மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடத்திட கோவை மாவட்ட சங்கம் பொறுப்பேற்றது. 
  • அமைப்பை பலப்படுத்திட கிளை செயலர்கள், முன்னோடிகள் கலந்து கொள்ளும் கிளை செயலர்கள் கருத்தரங்கம் 4 பகுதிகளில் நடைபெறும். 
  • ஊதிய மாற்றம் குறித்த மாநில சங்க கருத்துகளை வடிவமைக்க 9 பேர் குழு அமைக்கபட்டு தகவல்களை திரட்டி மத்திய சங்கத்திற்க்கு தெரிவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

-  மாநிலச்சங்க இணைய தளத்திலிருந்து