14 July 2018

மத்திய சங்கச் செய்திகள்
 
ஊதிய மாற்றக்குழு அறிமுகக் கூட்டம் :

 ஊதிய மாற்றக்குழுவின் அறிமுகக் கூட்டம் 20.07.2018 வெள்ளியன்று நடைபெறவுள்ளது

 
 JE போட்டித்தேர்வுக்கு நிர்வாகம் ஒப்புதல் :

 போட்டித் தேர்வு நடத்துவது குறித்து நமது சங்கம் நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதித்து வந்ததன் அடிப்படையில், 2017ம் வருட ஆளெடுப்பிற்கான 50% ஒதுக்கீடு அடிப்படையிலான இளநிலைப் பொறியாளர்களுக்கான இலாகா போட்டித் தேர்வு நடத்துவதற்கான ஒப்புதலை கார்ப்பேரேட் அலுவகம் இன்று 13.07.2018 அன்று வழங்கியுள்ளது.

 31.03.2018 வரையிலான காலிப்பணியிடங்களை கணக்கீடு செய்ய மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளெடுப்பு விதிகளின் படி தேர்வு எழுதுபவர்களின் தகுதியை நிர்னயிப்பதற்கான கெடு தேதி 01.07.2017 ஆகும்


RTP – மேல்முறையீடு :

 DOT காலத்தில் அனேக ஊழியர்கள் RTPக்களாக பணிபுரிந்தனர். அவர்கள் பணி நிரந்தரம் பெற்ற பின்பும் அவர்களது RTP பணிக்காகம் சேவைக்காலமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவர்கள் பாதிப்படைந்தனர். இதனால் RTP தோழர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். இது குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தவை BSNL நிர்வாகம் அமுல்படுத்த வேண்டுமென தேசிய கூட்டுக் குழுக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்து விவாதித்தது. நிர்வாகம் இது குறித்து DOTதான் முடிவெடுக்க முடியும் என கூறியது. எனவே நமது மத்திய சங்கம் RTP தோழர்களை DOT செயலரிடம் மேல்முறையீடு செய்யுமாறு வழிகாட்டியுள்ளது. மேல் முறையீடிற்கான மாதிரிக்கடிதத்தினை மாநிலச்சங்கம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டச்சங்கங்கள் RTP தோழர்களின் மேல்முறையீட்டு கடிதங்களை பெற்று மொத்தமாக மாநிலச்சங்கத்திடம் ஒப்படைக்குமாறு மாநிலச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

 ஊதிய தேக்கம் :


பெரும்பாலான ஊழியர்கள் ஊதிய தேக்கப் பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் எந்தெந்த ஊதிய விகிதங்களில் தேக்கநிலை அடைந்துள்ளனர் என்ற விபரத்தை அளித்துதவுமாறு மாநிலச் சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

 குறைந்தபட்ச ஓய்வூதியம் :

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய சங்கம் நிர்வாகத்துடன் இன்று 13.07.2018 அன்று விவாதித்துள்ளது. இது குறித்து DOT இலாகாவுடன் விவாதிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


BSNL ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கூடாது :


BSNL நிர்வாகம் ஊழியர் நடத்தை விதிகளில் சரத்து 56(j)வை இணைத்து ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இதனை நமது மத்திய சங்கம் தொடர்ந்து எதிர்த்து வந்தது. இது குறித்து மத்திய சங்கம் இன்று நிர்வாகத்துடன் விவாதித்தது. ஊழியர்கள் மேல்முறையிடு செய்ய ஏதும் வழிவகை செய்து தரப்படவில்லை என நமது மத்திய சங்கம் குறிப்பிட்டுக் காட்டியது அதற்கு நிர்வாகம் அதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியது. மாவட்ட அளவில் ஸ்கிரினிங் கமிட்டி அமைக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

 மேலும் நமது மத்திய சங்கம் DOTயிலிருந்து BSNLலில் இணைந்த ஊழியர்களுக்கு பென்சன் விதி 37Aவில் பணிப்பாதுகாப்பு குறித்த அனைத்து சாதகமான அம்சங்கங்களும் இடம்பெற்றிருப்பதால் அதனை மீறிச்செயல்படக்கூடாது என நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் மாவட்ட அளவில் ஸ்கிரினிங் கமிட்டி அமைக்கலாம் என்ற நிர்வாகத்தின் பரிந்துரையை எற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டிப்பாக கூறியுள்ளது