வெளிப்புற சிகிச்சைக்கான வருடாந்திர ஈடு உச்சவரம்பு மீண்டும் உயர்த்தப்பட்டது.
( Annual Ceiling for Reimbursement for Outdoor Treatment )
BSNL ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தின் படி வெளிப்புறச் சிகிச்சைக்கான ( Outdoor Treatment ) வருடாந்திட ஈட்டுக்கான உச்சவரம்பை 12 நாட்கள் சம்பளமாக குறைக்க நிர்வாகம் முற்பட்டது. இதனை அனைத்து சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன.
ஊழியர்களின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு நிர்வாகம் வெளிப்புறச் சிகிச்சைக்கான
( Outdoor Treatment ) வருடாந்திட ஈட்டுக்கான உச்சவரம்பை தற்போது 23 நாட்கள் சம்பளம் + 78.% பஞ்சப்படி என மீண்டும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு 01.04.2018 முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவு ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்.