14 July 2018

ஓய்வூதியருக்கான மருத்துவப்படி
மறுபரிசீலனை செய்யப்பட்டது
 
BSNL  ஊழியர்களுக்கு வெளிப்புற சிகிச்சைக்கான கட்டணைத்தை ஈடுசெய்வதற்கு மாற்றாக மருத்துவப்படியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. பின் நிர்வாகம் செலவைக் குறைக்கும் நோக்கில் அதை ஊழியர் சங்கங்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நிறுத்தியது. இதனை நமது சங்கம் கடுமையாக கண்டித்தது. பின் மருத்துவப்படியை மீண்டும் பெறுவதற்கான முயற்சியாக முதலில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மட்டுமாவது நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகம் மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு நீட்டித்து வழங்கியது. இது பரிட்ச்சாத்தமாக முதல் 6 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது. 6 மாத காலத்துக்கு பிறகு மீண்டும் ஒரு முறை நீட்டிப்பு செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.
தற்போது நிர்வாகம் ஓய்வுபெற்றோருக்கான மருத்துவப்படியை  மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி இதுவரை வழங்கப்பட்ட  மருத்துவப்படிக்கான ஆண்டு உச்சவரம்பை 01.04.2018 முதல்  50 சதம் என்ற அளவிலிருந்து 25 சதமாக குறைத்து நேற்று 13.07.2018 அன்று உத்தரவிட்டுள்ளது. ஆண்டுக்கான மருத்துவப்படி என்பது கடைசியாக பெற்ற சம்பளத்தில் 23நாட்கள் சம்பளம்+ ஏப்ரல் மாத பஞ்சப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 25 சதமாக இருக்கும்.
இனி ஓய்வூதியர் ஒவ்வொருவருக்கும் மருத்துவபடியாக குறைந்தபட்சமாக  ஆண்டுக்கு ரூ.12000/-ஐ மூன்று மாதங்கங்களுக்கு ஒருமுறை என நான்கு தவணைகளில் பிரித்து வழங்கப்படும்.
ஓய்வூதியர் விரும்பினால் இத்திட்டத்திலேயே தொடரலாம் அல்லது ஆண்டு தொடக்கத்தில் விருப்பம் கொடுத்து ரசீது கொடுத்து மருத்துவக் கட்டணத்தை திரும்பப்பெறும் திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.
ஓய்வூதியர் இந்த நிதியாண்டில் இதுவரை ஏதும் மருத்துவக் கட்டணத்தை ஈடு செய்யவில்லை எனில் உடனடியாக 3மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி பெற விண்ணப்பிக்கலாம்