6 July 2018

அனைத்து சங்க போராட்ட அறிவிப்பு கடிதம் வெளியிடப்பட்டது...


BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின்சார்பாக 26.06.2018 & 04.07.2018 அன்று நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடைப்படையில் 

  • BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதியமாற்றம்
  • BSNL வழங்க வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பிற்கு அரசு விதிமுறைகளை அமுல்படுத்து
  • BSNL சமர்ப்பித்த வரைவறிக்கையின் படி BSNL நிறுவனத்திற்கு   4G  அலைக்கற்றை ஒதுக்கீடு
  • BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி...

  • 11.07.2018 அன்று BSNL  கார்ப்பரேட் அலுவலகம் , மாநில CCA அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது

  • ஜூலை' 2018 - 24 , 25 , 26 ஆகிய நாட்களில்  BSNL கார்ப்பரேட் அலுவலகம் , மாநிலப் பொதுமேலாளர் அலுவலகம்  மற்றும் மாவட்ட பொதுமேலாளார் அலுவலகங்கள் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது 

ஆகிய போராட்டங்களுக்கு அறை கூவல் விடுக்கப்பட்டது.

மேற்க்கண்ட போராட்டங்களுக்கான அனைத்து சங்கத் தலைவர்கள் கையொப்பமிட்ட போராட்ட  அறிவிப்புக் கடிதம் இன்று 06.07.2018 அன்று   தொலைத்தொடர்பு செயலருக்கும் , நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது.

தோழர்களே! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!