6 July 2018

BSNL  AT YOUR DOOR STEP
அனைத்து சங்க கூட்டமைப்பு தீர்மானம்



26.06.2018 அன்று நடைபெற்ற கூட்ட முடிவின் படி BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம் 04.07.2018 அன்று தோழர் பிரகலாத் ராய் , பொதுச்செயலர் , AIBSNLEA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA,BSNLMS and BSNLATM ஆகிய சங்கங்களின் பொதுச்செயலர்களும் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


ஊழியர்கள் 3வது ஊதிய மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் வேளையில் ஏப்பமிடும் விலைக் கொள்கையை ஜியோ நிறுவனம் அமுல்படுத்தி வருவதனால் நமது நிருவனம் சந்திக்கும் வருவாய் இழப்பை அதிகரிப்பது குறித்து கூட்டம் தீவிர ஆலோசனை நடத்தியது. மேலும் நிறுவனத்தின் விற்பனையையும், வருவாயையும் உடனடியாக உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து ஆழ்ந்து பரிசீலித்தது.


ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகளை கூட்டம் எட்டியது.

அதன்படி;


  • ஊழியர்களை ஒருங்கிணைத்து “ BSNL AT YOUR DOOR STEP “ என்ற இயக்கத்தை பொதுமக்களிடம் இந்த ஆண்டும் முழுவதும் செயல்படுத்தி BSNL வருவாயைப் பெருக்குவது.

  • மாநில, மாவட்ட மையங்களில் ஊழியர் குழுக்களை அமைத்து FTTB , Broadband , Leased Line , Mobile Service ஆகிய நமது நிறுவனத்தின் சேவைகளை மக்களிடம் தீவிரமாக கொண்டு சேர்ப்பது. 

  • ஒவ்வொரு ஊழியரையும் வாரத்தில் ஒரு நாளாவது மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபடுத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


அனைத்து சங்க உறுப்பினர்களும் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். மாநில , மாவட்ட மையங்களிலும் அனைத்து சங்க கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொண்டது. 

மேலும் சென்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 11.07.2018 அன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் 24.07.2018 முதல் 26.07.2018 வரை மாநில , மாவட்ட மற்றும் CCA அலுவலகங்கள் முன் நடத்த திட்டமிடப்பட்ட தர்ணா போராட்டம் ஆகிய போராட்டங்களுக்கு தோழர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திட கூட்டம் கேட்டுக் கொண்டது.