5 July 2018

மாற்றல் விலக்கு சலுகையை
 தவறாக பயன்படுத்த அனுமதிக்காதீர் ...
                     மாநில நிர்வாகங்களுக்கு...                           கார்ப்பரேட் அலுவலகம் தெளிவுறுத்தல்...


தொழிற்ச்சங்க நிர்வாகிகளுக்கு நிர்வாகம் மாற்றலிருந்து விலக்கு அளித்து சலுகை செய்து தந்துள்ளது. இதில்  சில இடங்களில்  விதிமீறல் நடந்துள்ளதுள்ளதாகவும் அது குறித்து  தங்களின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும் மாநில நிர்வாகங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. 

அதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் / அசோசியன்களின் சங்க நிர்வாகிகள் மாற்றல் விலக்கு சலுகையைப் பெற்று வருகின்றனர் என்றும், பின் விசாரித்த வகையில் அவர்களுக்கான மாற்றல் உத்தரவு வெளியான பின் அச்சலுகையை தவறாகப் பயன்படுத்தி விலக்கு பெற்றது தெரிய வந்துள்ளது எனவும் , இது போன்று உள் நோக்கத்துடன் இச்சலுகையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதனால் இது போன்ற விதிமீறல்களை  வருங்காலத்தில் ஆதரிக்ககூடாது என்று மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ;
  1. அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள்
  2. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் சங்கங்கள்
  3. அதிகாரிகள் ஆதரவு அசோசியன்கள் ஆகிய சங்கங்களின் 

சங்க விதிமுறைகளுக்குட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்  சங்க நிர்வாகிகளுக்கு அவர்கள் மாற்றல் பெற்றபின் மாற்றல் விலக்கு சலுகையை வழங்கக் கூடாது என BSNL நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.