9 July 2018



தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
விருதுநகர் மாவட்டம்

மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்

·        டெலிகாம் டெக்னீசியன் Longstay மாற்றல் விவகாரத்தில் கடந்த காலங்களில் இரு சங்கங்களும் எற்றுக் கொண்டு 2010 முதல் 2016 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த 2 வருடங்கள் என்ற Tenure காலத்தை கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் அடிப்படையில் 3 வருடங்களாக மாற்ற வேண்டும் என்று BSNLEU சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டது. இதனை எதிர்த்து நமது கூட்டணிச்சங்கங்களை இணைத்து பலகட்ட  போராட்டங்கள் நடத்தினோம். போராட்டங்களுக்கு முடிவு கட்டும் வகையில் இரு சங்க மாநிலச்செயலர்களின் முன்னிலையில் இரு சங்க மாவட்டச் செயலர்களும் இணைந்து NFTE சங்கத்தைச் சேர்ந்த மூன்று தோழர்களுக்கும், BSNLEU சங்கத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் , SEWA சங்க தோழர் ஒருவருக்கும் மாற்றல் வழங்குவது என உடன்பாடு கண்டனர். ஆனால் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டை மீறி உள்நோக்கத்தோடு விருப்பமாற்றலை அமுல்படுத்தினால் மட்டுமே உடன்பாட்டை ஏற்பேன் என ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது BSNLEU சங்கம்.  எனவே அச்சங்கத்தின் இம்முடிவை நாம் ஏற்கவில்லை. BSNLEU சங்கத்தின் ஊழியர் விரோத நிலைப்பாட்டை NFTE விருதுநகர் மாவட்டச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.


·        தோழமை என்பது கூட்டுச்செயல்பாட்டின் அடிநாதம். ஆனால் விருதுநர் மாவட்டத்தில் BSNLEU சங்கம் மற்ற சங்கங்களுடன் தோழமையான செயல்பாட்டை கடைப்பிடிப்பதற்கு மாறாக தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருவதால் இனி வரும் எந்த கூட்டுப்போராட்டங்களிலும் அச்சங்கத்தோடு கைகோர்ப்பதில்லை என NFTE விருதுநகர் மாவட்டச் செயற்குழு  ஏகமனதாக தீர்மானிக்கிறது.