ஊதியக்குழுவின் இரண்டாவது கூட்டம்
ஊதியக்குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று 09.08.2018 நடைபெற்றது.
முன்னதாக ஊதிய விகிதங்களை கட்டமைப்பதற்கான் ஊழியர் தரப்பு கூட்டம் 03.08.2018 அன்று நடைபெற்றது அன்றைய கூட்டத்தில் ஊதிய விகிதங்கள் கட்டமைக்கப்பட்டு ஊழியர் தரப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
நேற்று 08.08.2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்களின் பொதுச்செயலர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஊதியக்குழுவின் தலைவர் திரு.H.C.பந்த அவர்களிடம் முறைப்படி வழங்கினர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஊழியர் தரப்பு அறிக்கை குறித்து கலந்தாலோசிக்க சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது என நிர்வாகம் கோரியது .
அதன்படி நிர்வாகம் நமது அறிக்கையை பரிசீலித்த பிறகு அடுத்த கூட்டத்தை வரும் மீண்டும் 27.08.2018 அன்று நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.