4 October 2018

JE(TTA) இலாக்காத்தேர்வு மறுபரிசீலனை முடிவுகள்

JE(TTA) கேடருக்கான இலாக்காத்தேர்வு 28/01/2018 அன்று நடைபெற்றது. தேர்வு மிக கடினமாக இருந்ததோடு மட்டுமின்றி , தவறான் கேள்விகள் இருந்ததாலும் நாடு முழுவதும் நூற்றுக்கும் குறைவான தோழர்களே வெற்றி பெற்றனர்.


ஆகவே தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும் , மதிப்பெண்களில் தளர்வளித்து புதிய முடிவுகளை வெளியிடவும் நமது சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது


 அதனடிப்படையில் மதிப்பெண் தளர்வு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று 03/10/2018 வெளியிடப்பட்டுள்ளன


 தமிழகத்தில் 22 தோழர்களும், அகில இந்திய அளவில் 250 தோழர்களும் ஒருகட்ட விலக்கு அடிப்படையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருதுநகர் மாவட்டச்சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


 முயற்சி எடுத்த மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துகள்