5% பிட்மென்ட் வழங்குவது கூட கடினமானது - DOT கைவிரிப்பு...
அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட அனைத்து சங்க கூட்டமைப்பு கூடுகிறது...
DOTயின் கூடுதல் செயலருடன் நேற்று (30.01.2019) அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து..
நேற்றும், இன்றும் (31.01.2019) BSNL CMD அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் மீண்டும் திரு அன்சு பிரகாஷ் DOTயின் கூடுதல் செயலர் அவர்களை சந்தித்தினர். அப்போது அவர் 5% பிட்மன்ட் கூட வழங்குவது கடினமானது என்ற எதிர்பாராத தகவலை AUAB தலைவர்களிடம் தெரிவித்தார். நேற்றைய சந்திப்பின் போது 5% பிட்மன்ட் தருவதாக DOTயின் கூடுதல் செயலர் கூறியதை AUAB தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இத்தைகைய சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடுவதற்காக AUAB தலைவர்கள் நாளை (01.02.2019) 11.30 அளவில் கூடவுள்ளனர்.
மேலும் நேற்றைய கூட்டத்தில் ஓய்வூதிய மாற்றத்திற்கும் 5% பிட்மென்டே வழங்கப்படும் என கூறப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சங்க கூட்டமைப்பு ஓய்வூதிய மாற்றதை தனியாக தீர்க்க கோரி DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.