30 January 2019


BSNL அனைத்துசங்க கூட்டமைப்பு
DOT கூடுதல் செயலர் சந்திப்பு 


அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் DOT கூடுதல் செயலர் திரு அன்சு பிரகாஷ் அவர்களை இன்று(30.01.2019) சந்தித்தனர். 

இன்றைய கூட்டத்தில்... 

அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக தோழர் சந்தேஷ்வர்சிங் NFTE, தோழர் P.அபிமன்யு BSNLEU , தோழர் K.செபஸ்டின் SNEA, தோழர் பிரகலாத்ராய் AIBSNLEA ஆகியோரும்... 

DOT தரப்பிலிருந்து திரு.R.K.காண்டேல்வால் Jt.Secretary(Admn), திரு S.K.ஜெய்ன் DDG(Estt), திரு.ராஜீவ் குமார் DDG(Budget) ஆகியோரும்... 


BSNL தரப்பிலிருந்து திருமதி T.சுஜாதா ரே Director(HR), திரு.A.M குப்தா GM(SR) ஆகியோரும் கலந்து கொண்டனர்... 

3வது ஊதியமாற்றம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகிய கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 3வது ஊதிய மாற்றத்தைப் பொறுத்த மட்டில் DOT தரப்பிலிருந்து 5% ஊதிய நிர்ணயத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் AUAB தலைவர்கள் இதனை ஏற்றுக் கொண்டால் 05.02.2019 அன்று நடைபெறவுள்ள டிஜிட்டல் கமிசன்( முந்தைய டெலிகாம் கமிசன்) கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


கூட்டமைப்பின் தலைவர்கள் 5% பிட்மன்ட் என்பது மிகவுக் குறைவானது எனக் கூறி அதனை ஏற்க மறுத்தனர். அதன் பின் DOTயின் கூடுதல் செயலர் இது குறித்து CMD BSNL அவர்களுடன் விவாதித்த பின் ஒரிரு நாளில் தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறு ஆலோசனை கூறினார். 

கடந்தமுறை DOT கூடுதல் செயலருடன் நடைபெற்ற கூட்டத்தில் 0% பிட்மன்ட் தான் தர முடியும் என DOT தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது தோழர்களுக்கு நினைவிருக்கலாம். 

ஓய்வூதிய மாற்ற விசயத்திலும் அதே பிட்மன்டை தான் பரிந்துரைத்தது அதனை கூட்டமைப்பின் தலைவர்கள் அதனை முற்றிலுமாக மறுதலித்தனர். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் அரசால் வழங்கப்படுகிறது எனவே BSNLன் அப்போர்டபிலிட்டி சரத்துக்கும் அவர்களுக்குக் சம்பந்தமில்லை என கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு DOTயின் கூடுதல் செயலர் ஓய்வூதிய மாற்றம் குறித்து DDG (Estt) அவர்களுடன் தனியாக விவாதிக்கலாம் என தெரிவித்தார். 

கூடுதல் செயலருடனான சந்திப்பிக்குப் பின் கூட்டமைப்பின் தலைவர்கள் 01.01.2017க்கு முந்தைய ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பார்முலா குறித்து DDG (Estt) அவர்களுடன் விரிவாக விவாதித்தனர். அவர்களுக்கான ஓய்வூதிய பார்முலா குறித்த குறிப்பை விரைவில் சமர்ப்பிக்க  வேண்டும் என முடிவு செய்தனர்.

ஓய்வூதிய பங்களிப்பு விசயத்தில் DOT தனது பரிந்துரையை Department of Expenditureக்கு அடுத்த வாரத்துக்குள் அனுப்பிட முயற்சித்து வருகிறது.

4 G அலைக்கற்றை மற்றும் காலியிடங்களை பணமாக்குதல் ஆகிய விசயங்கள் 05.02.2019 அன்று நடைபெறவுள்ள Digital Commission கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தோழர்களே நம்பிக்கையோடு காத்திருப்போம்.. 

போராட்ட களமும் நம்மை எதிர் கொண்டு காத்திருக்கிறது. . .