9 April 2019


பென்சன் பிதாமகன் தோழர் O.P.குப்தா”
 புத்தக வெளியீட்டு விழா


தோழர் ஆர்.கே மற்றும் தோழர் பட்டாபிராமன் ஆகியோர் இணைந்து எழுதிய “பென்சன் பிதாமகன் தோழர் O.P.குப்தா” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக நேற்று 08.04.2019 அன்று தமிழ்மாநில CGM அலுவலக வளாகத்தில் மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார். தோழர் பட்டாபி அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். மத்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்கள் புத்தகத்தை வெளியிட தமிழ்நாடு AITUC சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் T.M.மூர்த்தி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தோழர் சந்தேஸ்வர்சிங், GS NFTE தோழர் C.K.மதிவாணன் , அகில இந்திய துணைத்தலைவர், NFTE , தோழர் K.வள்ளிநாயகம் முன்னாள் பொதுச் செயலர் FNTO , தோழர் V.சுப்புராமன் பொதுச் செயலர் TEPU , தோழர் R.வெங்கடாச்சலம் மாநிலச் செயலர் AIBSNLPWA தோழர் K.முத்தியாலு AGS AIBSNLPWA, தோழர் பல்ராம் CS SEWA BSNL, தோழர் வளனரசு CS SNEA தோழர் துரையரசன் CS AIBSNLEA, தோழர் கிருஷணன் CS TEPU , தோழர் செம்மல் அமுதம் மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநிலம் முழுவதுமிலிருந்து 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில உதவிச் செயலர் தோழர் முரளிதரன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

நமது பொதுச்செயலர் தனது உரையில் செப் 2000 போராட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வழக்கு தொடுப்பது சரியல்ல எனவும் , எந்த மாநிலச் சங்கமும் 1.70 லட்சம் ஊழியர்களின் தலைஎழுத்தை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது எனவும் வேண்டிக்கொண்டார்.


தோழர் வள்ளிநாயகம் பேசுகையில் மேற்படி வழக்கு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். வழக்கு குறித்து சாதகமாகவோ / பாதகமாகவோ பேசிட தான் விரும்பவில்லை எனவும் , இன்றைய அரசின் கைப்பாவையாக நீதிமன்றம் மாறியுள்ள சூழ்நிலையில் பாதகமாக தீர்ப்பு வந்தால் அது அரசுக்கு சாதமாக மாறும் நிலை ஏற்பட்டு விடும் என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.