9 April 2019


VRS திட்டத்தை அமுல்படுத்தாதே...
நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல்...

புத்தாக்கம் என்ற பெயரில் BSNL ஊழியர்களுக்கு VRS திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அரசு விரைந்து செயல்பட்டுவருகிறது. புத்தாக்கம் குறித்து ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க இதுவரை DOT நிர்வாகம் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மேலும் BSNLக்கு சொந்தமான நிலங்களை விற்று காசாக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை BSNL ஊழியர்களுக்கு VRS திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திருப்பி விடுவது என மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. 

VRSஐ அமுல்படுத்துவது என்பது BSNL ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து தனியார்மயப்படுத்துவதற்கான அரசின் தந்திரமே. 

அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் 12.04.2019 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இதற்கான முறையான அறிவிப்பை NFTE , BSNLEU , AIBSNLEA , BSNLMS , BSNLATM, TEPU , BSNLOA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலர்கள் கூட்டாக DOT செயலருக்கும் , BSNL CMD அவர்களுக்கும் இன்று 09.04.2019 அளித்துள்ளனர்.