விருப்ப ஓய்வுத்திட்டம் - உபகுழுக்கள்
விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து BSNL நிர்வாகம் நேற்று 01.11.2019 அன்று உத்தரவிட்டுள்ளது.
- விருப்ப ஓய்வுத்திட்டம் குறித்த கேள்விகள் பட்டியல் தயாரிப்பது
- விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கான Programmeஐ ESS Portalலில் நிறுவுதல்
- விருப்ப ஓய்வுத்திட்டத்தின் சிறப்புக் கூறுகள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து திரைவிளக்கம் மற்றும் விடியோ தயாரிப்பது
- மனித வளத் தேவைகளை இறுதி செய்வது
- அமைப்பு ரீதியாக மறுகட்டமைப்பு செய்தல்
- வெளியாருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணிகளை முடிவு செய்தல்
- விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மாநில் தலைமைப் பொதுமேலாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் DO’s & DO NOT’s பட்டியல் தயாரிப்பது.
- விருப்ப ஓய்வுத் திட்ட செயலியை உருவாக்குதல்
மேற்கண்ட பணிகளை இக்குழுக்கள் கவனிக்கும். இப்பணிகளை முடிப்பதற்கான காலக் கெடுவையும் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்கண்ட அத்தனை பணிகளையும் 08.11.2019க்குள் முடித்திட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாநிலங்களில் விருப்ப ஓய்வுத்திட்டம் செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக 4 அல்லது 5 மாநிலங்களுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திற்கு GM(SR) கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.