1 November 2019


விருப்ப ஓய்வு திட்டம் (VRS) - சில குறிப்புகள்

  • விருப்ப ஓய்வுத்திட்டம் முறையாக அறிவிப்பு வெளியாகும் அன்று (Notified effective date )  50 வயது அல்லது 50க்கும் மேல் உள்ள அனைவரும் விருப்ப ஓய்விற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.
  • ஊழியர்கள்/அதிகாரிகள் எவரேனும் BSNL க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தால் அவர்களின்  விருப்ப ஓய்வு விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாது. உதாரணமாக RTP பணிக்காலத்தை  சேவைக் காலமாக கணக்கிட வேண்டும் என்று வழக்குப் போட்டுள்ள தோழர்கள் VRS ல் செல்ல விரும்பினால் அந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். அதன் பின்னரே VRS க்கு விருப்பம் தெரிவிக்க வேண்டும்)
  • கருணைத்தொகை (Ex gratia) இரு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை பிப்ரவரி  to மார்ச் 2020 க்குள்ளும், இரண்டாவது தவணை ஏப்ரல் to  ஜூன் 2020 க்குள்ளும வழங்கப்படும்.
  • கருணைத்தொகையிலிருந்து (Ex- gratia) ஊழியர்களின்  கடன் நிலுவைகள் அனைத்தும் பிடித்தம் செய்யப்படும்.  வருமான வரியும் பிடித்தம் செய்யப்படும்.
  • Gratuity மற்றும் Commutation ஆகியவை தற்போது 55 வயதுக்கு கீழுள்ள தோழர்களுக்கு  அவர்கள் 60 வயதை அடைந்தவுடன் வழங்கப்படும்.
  • Gratuity மற்றும் Commutation ஆகியவை தற்போது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  6 வருடங்களுக்கு பிறகு  (from 2024-25) வழங்கப்படும்.
  • பணிக்கொடை(Gratuity)  வழங்கப்படும் வரையிலான காலத்திற்கு         GPF க்கு வழங்கப்படும் வட்டி கணக்கிடப்பட்டு , பணிக்கொடையுடன்  சேர்த்து வழங்கப்படும்.
  • எதிர்பாராத விதமாக விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர் இறக்க நேரிட்டால், உடனடியாக அவரின் வாரிசு/மனைவிக்கு வட்டியுடன் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும்.
  • ஒரு ஊழியருக்கு எவ்வளவு பணிக்கொடை வழங்கப்படும் எவ்வளவு வட்டி கிடைக்கும் எந்த தேதியில் வழங்கப்படும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்  பென்ஷன் உத்தரவிலேயே தெரிவிக்கப்படும்.
  • Leave Encashment தொகை உடனடியாக பணம் வழங்கப்படும்.
  • இலாக்கா குடியிருப்பில் உள்ளவர்கள் தற்போது உள்ள விதிகளின்படி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து அங்கு வசிக்கலாம்.