1 February 2020


வாழ்த்துகள்…

தோழர்களே… தோழியர்களே…

BSNL ன் பெரும் பணி ஓய்வு நாளான 31.01.2020ல் பணி முடித்து செல்லும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தோழர் ஓம் பிரகாஷ் குப்தாவின் ஓய்வில்லா உழைப்பு நமது பணிக்காலத்தில் உயர் ஊதியம், பதவி உயர்வு பெற்றிட , குழந்தைகளை உயர்நிலைக்கு கொண்டுசெல்ல , நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள நமக்கு உதவியது.

குப்தாவின் தொலைநோக்கு பார்வையால் செப்டம்பர்’2000ல் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தால் பெற்ற ஓய்வூதிய கொள்கை பணி ஓய்வுகாலத்தில் நமது வாழ்க்கையை பாதுகாப்பானதாக தொடர உதவியிருக்கிறது.

பணிக்காலம் முழுமையும் நம்பிக்கையுடன் தோழர் குப்தாவின் வழியில் நின்று தொழிற்சங்கத்தின் அனைத்து போராட்டங்களையும் வெற்றிகரமாக மாற்றியதன் பெருமை அனைத்தும் தோழர்களாகிய உங்களுக்கே..

உங்களது போராட்ட உணர்வும், சங்கப் பணியில் உங்களது அர்ப்பணிப்பும் தான் தோழர் குப்தாவின் மன வலிமைக்கு காரணம்.

தொழிலாளர் நலன் காக்கவும், தொழிற்சங்க உரிமை பெற்றிடவும் அவற்றைக் காத்திடவும் உங்களது உழைப்பைத் தந்திருக்கிறீர்கள். உங்களுக்குக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எங்களது நெஞ்சு நிறை நன்றி…

தொடர்ந்து செயல்பட… உற்சாகத்துடன் உதவிட வேண்டுகிறோம்…

வாழ்த்துக்களுடன்…
தோழமையுள்ள…

M.ராஜேந்திரன்        P.சம்பத்குமார்               S.வெங்கடப்பன்
மாவட்டத்தலைவர்    மாவட்டச் செயலர்    மாவட்டப் பொருளாளர்

    தோழர் K.சேது                        S.P.மதிவாணன்           
முன்னாள் மாவட்டச் செயலர்       முன்னாள் மாவட்டச் செயலர்  

D.ரமேஷ்
       மாநில உதவிச் செயலர்