DOT ல் ஈட்டிய விடுப்புக்கு வருமான வரி கூடாது
வருமான வரித்துறையிடம் விண்ணப்பிக்க மாநிலச் சங்கம் வேண்டுகோள்...
DOT ல் ஈட்டிய விடுப்புக்கு வருமான வரி விலக்கு உண்டு என்பதுதான் விதி. அதனடிப்படையில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் DOT ல் ஈட்டிய விடுப்பிற்கும் வருமானவரி செலுத்த வேண்டுமென வலியுறுத்தி விருப்ப ஓய்வில் சென்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் /அதிகாரிகள் ஆகியோர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இன்று 9.2.2021 மாநில நிர்வாகத்தில் பொதுமேலாளர்(நிதி) GM(Fin) அவர்களிடம் நமது மாநிலச் சங்கம் இந்த பிரச்சினையை முன்வைத்து விவாதித்தது.
இது குறித்து வருமான வரி துறைக்கு கடிதம் எழுத வேண்டும் என மாநில நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது..
வருமான வரித்துறை தனிநபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிற காரணத்தினால் BSNL கார்ப்பரேட் அலுவலக No : 1001-04/2011-12/Taxation/BSNL/LE/196 Dated 04/05/2012 உத்தரவை இணைத்து வருமான வரித்துறைக்கு வருமானவரி பிடித்ததில் இருந்து விலக்கு வேண்டும் என கோரி கடிதம் கொடுக்க வேண்டும் என தோழர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேற்க்கண்ட உத்தரவின் நகல் நமது தமிழ்மாநிலச் சங்கத்தின் Whatsapp குழுவில் பகிரப்பட்டுள்ளது.