அன்புள்ள
தோழர்களே வணக்கம்.
ஊழியர்களுக்கான
குரூப் இன்ஷூரன்ஸ் (GTI) இந்த மாதம்
பிப்ரவரி பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
·
இன்சூரன்ஸ் தொகை ரூ.20 இலட்சம்
15.09.1971அன்றோ அதன்பிறகோ பிறந்தவர்களுக்கு பிரிமியத்தொகை
வருடத்திற்கு ரூ.3776/-
15.09.1971 முன்பு பிறந்தவர்களுக்கு பிரிமியத்தொகை
வருடத்திற்கு ரூ.18172/-
·
பாலிசி புதுப்பிக்கப்பட
வேண்டிய நாள் 01.03.2022. அனைத்து ஊழியர்களும்
திட்டத்தில் இணையவோ / புதுப்பிக்க தகுதியானவர்கள்.
·
விருப்பம் தெரிவிப்பதற்கான
இணைய சாளரம் 18.02.2022 முதல்
22.02.2022 வரை திறந்திருக்கும். இணையத்தில் விருப்பம்
தெரிவிப்பது மட்டுமே செல்லதக்கதும் இறுதியானதும் ஆகும். எழுத்து
மூலமாக தெரிவிக்கப்படும் விருப்ப மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
·
சென்ற ஆண்டே
இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு பாலிசி தன்னிச்சையாகவே புதுப்பிக்கப்பட்டுவிடும். அத்தகையவர்கள் திட்டத்தை புதுப்பிக்க எந்து
விருப்பமும் தர அவசியமில்லை. ஏற்கனவே திட்டத்தின் இணைந்தவர்களின்
நிலவரம் ESS போர்டலில் காண்பிக்கப்படும்.
·
ஏற்கனவே திட்டத்தில்
இணைந்தவர்கள் “ Wish to Withdraw “ என்ற
விருப்பத் தேர்வை கிளிக் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து
விலகிக் கொள்ளலாம்.
·
“Wish to Join / Continue” என்ற விருப்பத் தேர்வை தெரிவு செய்து உறுதிப்படுத்தி ஆர்வமுள்ள அனைத்து ஊழியர்களும் பாலிசியில் இணையவோ
/ பாலிசியை புதுப்பிக்கவோ முடியும். இவ்வாறு திட்டத்தில்
இணைந்தவர்கள் விருப்பபட்டால் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளலாம் அவர்களுக்கான சாளரம்
23.02.2022 முதல் 24.02.2022 வரை திறந்திருக்கும்.
· ஊழியர்கள் தங்களது
விருப்பச் சான்றிதழை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம்.
·
விருப்பம் தெரிவித்த
ஊழியர்களில் யாரேனும் 01.03.2022க்கு
முன் பதவி விலகினாலோ / ஓய்வுபெற்றாலோ / இறந்து விட்டாலோ அவர்கள் திட்டத்தில் இணைந்தவர்களாக கருதப்படமாட்டார்கள்.