11 March 2022

 

2022, மார்ச் 28,29 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம்

தமிழ் மாநில BSNLEU- NFTE சங்கங்கள் முடிவு

 தோழர்களே வணக்கம்.

 மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று நடைபெற இருக்கக்கூடிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து  10.03.2022 BSNLEU அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் BSNLEU சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா, மாநிலச் செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன்,மாநில பொருளாளர் தோழர் K.சீனிவாசன் மற்றும் NFTE சங்கத்தின் சார்பாக  மாநில தலைவர் தோழர் G.S.முரளிதரன் ,மாநில செயலாளர் தோழர் K.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

 1.இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக, 2000 கோரிக்கை நோட்டீஸ் மற்றும் 200 Poster அச்சடித்து மாவட்டங்களுக்கு  அனுப்பி வைப்பது. இந்த நோட்டீஸ் மற்றும் போஸ்டர்கள் NFTE மாவட்ட செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை BSNLEU மாவட்ட செயலாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

 2. இரண்டு சங்கங்களும் இணைந்து கடலூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் 23.03.2022 அன்று வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்களை நடத்துவது. மற்ற மாவட்டங்களில் மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டத்தின் சூழ்நிலை பொறுத்து  வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்திற்கான தேதியை முடிவு செய்து நடத்திட  நடவடிக்கை மேற்கொள்ளவும், வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில்  அந்தந்த மாவட்டங்களில் உள்ள  மாநில சங்க நிர்வாகிகளை பயன்படுத்திட வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.