ஊதிய மாற்றக்குழு கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்...
ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம் 10-03-2022 அன்று நடைபெற்றது. 5% சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்தை வழங்க வேண்டும் என ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் வலுவாக குரல் கொடுத்தனர். அதே போன்று, ஏற்கனவே, ஊதிய மாற்றக் குழுவால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊதிய விகிதங்களே இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். பல்வேறு விவாதங்களுக்கு பின் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன.
1) 5% சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் என்கிற ஊழியர் தரப்பு கோரிக்கைகளின் மீது நிர்வாக தரப்பு தனது கருத்துக்களை உருவாக்கும்.
2) 2022 முதல் 2026 வரை தேக்கநிலை காண உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்படும்.
3) பூஜ்ய சதவிகித நிர்ணய பலன் வழங்கப்பட்டால் ஓய்வூதியம் குறையும் என்கிற ஊழியர் தரப்பு வழங்கிய உதாரணங்களை நிர்வாகம் பரிசீலிக்கும்.
4) ஊதிய மாற்றத்திற்கு பின் ஏதாவது ஊதியக் குறைப்பு ஏற்படுமா என்பதை நிர்வாகத் தரப்பு மேலும் ஆய்ந்து பார்க்கும்.